சேலம்: சேலம் பொருளாதார குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்று கொண்டார்.
சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்தவர் கணேசன். இவர், மேட்டூர் பேபி ஈமு ஃபார்ம்ஸ் மீதான புகார் மீது, நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.
அதேபோல, சங்ககிரி, "அபி' ஈமு பண்ணை' மீது குவிந்த புகார்கள் மீதும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள், உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர்.
அதோடு, சேலத்தில் செயல்பட்டு வந்த, ஜெய் ஈமு பண்ணை மோசடி விவகாரத்தில், அதன் உரிமையாளர் ரஞ்சித், பங்குதாரர் ராஜா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாறாக, அங்கு வேலை செய்த ஊழியர் கோபி என்பவரை குற்றவாளியாக சேர்த்துகைது செய்தார்.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், கோபி கைது நடவடிக்கைக்கு, டி.எஸ்.பி., கணேசன், கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளானார். அவர், பல்வேறு புகாருக்கு ஆளானதால், அதிரடியாக, டிச.,25ல், திருச்சி மாநகர கன்ட்டோன்மென்ட் உதவி கமிஷனராக, மாற்றப்பட்டார்.
எனினும், பணியில் இருந்து விடுபடாமல், டி.எஸ்.பி., கணேசன், போக்குகாட்டி வந்தார். அதையடுத்து, உயரதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவுக்கு பின், கடந்த, 24ல், கணேசன், பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். அவருக்கு, பதிலாக, தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல்படை, டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், மாற்றப்பட்டு, அவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் பொறுப்பேற்று கொண்டார்.
பொருளாதார டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் கூறுகையில்,""நிதி நிறுவனம், சீட்டுப்பணம் உள்ளிட்ட மோசடி குறித்து, பொதுமக்கள் நேரடியாக புகார் கொடுக்கலாம். புகார் மீது, வழக்குப்பதிந்து, சட்ட ரீதியாக பணத்தை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக, 94862-11871 என்கிற மொபைலிலும் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.