நாமக்கல்: பள்ளி அரையாண்டு தேர்வில், ப்ளஸ் 2வில் 1,100, எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஃபிப்ரவரி இறுதியில், சிறந்த வல்லுனர்களை கொண்டு, மூன்று நாள் சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்குகிறது. அரசு பொதுத்தேர்வில், தமிழக அளவில் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரே மாநில அளவில் சாதனை படைப்பதுடன், அதிக அளவில் தேர்ச்சியும் பெறுகின்றனர். ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைக்கவில்லை என்றாலும், குறைந்து மதிப்பெண் பெற்று அதிக அளவில் தோல்வி அடைகின்றனர்.
இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதை தவிர்க்க முடியவில்லை.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. "காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற செய்ய வேண்டும்' என, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தற்போது, அரையாண்டு தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் கூடுதல் மதிப்பெண் பெற்று, தேர்வில் தேர்ச்சி பெறமுடியும்.
மேலும், அரையாண்டு தேர்வில் ப்ளஸ் 2 தேர்வில், 1,100 மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை கொண்டு, மூன்று நாள் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி, ஃபிப்ரவரி இறுதியில் நடக்கிறது. அதன் மூலம் அவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.