ராஞ்சி: பிரதமர் வேட்பாளர் அறிவிக்க பா.ஜ.வில் இவ்வளவு போட்டி நிலவுகிறது. ஆனால் காங்.கட்சியி்ல் நாங்கள் பிரதமர் வேட்பாளரை இரண்டே மணிநேரத்தில் தேர்வு செய்து அறிவித்து விடுவோம் என மத்திய அமைச்சர் பேசினார்.2014- பொதுத்தேர்தலில், பா.ஜ. வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சரியானவர் என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா நேற்று தெரிவித்தார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிருப்தி வெளியிட்டன.இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பேசியதாவது: பா.ஜ. பிரதமர் வேட்டபாளர் யார் என்பதில் அவர்களுக்குள் இப்படி ஒரு போட்டி நிலவுகிறது. ஆனால் காங். கட்சியில் அப்படி ஒரு போதும் ஏற்பட்டதில்லை. நேரம் கைகூடி வரும் போது நாங்கள் பிரதமர் வேட்பாளரை இரண்டே மணி நேரத்தில் பேசி ஒரு மித்த கருத்துடன் அறிவிப்போம். எங்கள் கட்சியில் அப்படி ஒரு ஒற்றுமை உள்ளது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.