ஈரோடு: ""காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டிருப்பது, ஈயம் பூசப்பட்ட, பித்தளை ஓட்டை பாத்திரத்துக்கு, மீண்டும் முலாம் பூசியது போன்றதாகும். அவர் ஏற்கனவே தோற்ற தலைவர்; தோற்கும் தலைவர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷணன் கூறினார்.
ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோட்டில், மாநில தலைவர் பொன் ராதாகிருஷணன் தலைமையில் நடந்தது.
முன்னதாக, பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
இந்திய சரித்திரத்தில், நாட்டின் உள்துறை அமைச்சர், நாட்டு மக்களுக்கு, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டை, நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பது, இது தான் முதன் முறை. உள்துறை அமைச்சரால் நாட்டுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டிருப்பது, ஈயம் பூசப்பட்ட பித்தளை ஓட்டை பாத்திரத்துக்கு மீண்டும் முலாம் பூசியது போன்றதாகும். அவர் ஏற்கனவே தோற்ற தலைவர்; தோற்கும் தலைவர். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் என்னாகும் என மக்களுக்கு தெரியும். ஆனால், பாரதிய ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது நாடே அறியும். நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பொது செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.