கரூர்: போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள், கேன்களில் அடைத்து, சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததாலும், நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை, "விஸ்வரூபம்' எடுத்து வருகிறது. இதனால் மினரல் வாட்டருக்கு மவு சு அதிகரித்ததால், இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். டாஸ்மாக் பார்களில் அதிகளவு மினரல் வாட்டர் கேன்கள் பயன்படுத்தப்படுவதால், மினரல் வாட்டர் கேன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் பல போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள் பெருமளவில் முளைத்துள்ளன. அதேசமயம், போலி மினரல் வாட்டர் கம்பெனிகள் பெருமளவில் முளைத்துள்ளன.
இதில் கரூரில் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற வாட்டர் நிறுவனங்கள், மூன்று மட்டுமே உள்ளன. ஆனால், கரூர், அரவக்குறிச்சி ஆகிய சுற்றியுள்ள பகுதிகளில், போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள், 5க்கும் மேல் செயல்படுகிறது.
பிரபல கம்பெனிகளின் வாட்டர் கேன்களில், சுகாதாரமற்ற தண்ணீரை அடைத்து விற்பதும் ஆங்காங்கே நடக்கின்றன. இந்த போலி கம்பெனிகளின் தண்ணீரை அருந்துவதன் மூலம், மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
மினரல் வாட்டர் நிறுவனங்கள், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்.ஓ., முறையில் நீரை சுத்திகரித்து, விற்பனைக்கு அனுப்புகின்றன. இதன் மூலம், குடிநீரில் பாக்டீரியா, உலோகம், உப்புக்கள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படுகின்றன. இது மட்டுமல்லாது, இந்த நிறுவனங்களில் மினரல் வாட்டர் கேன்களுக்கு, ஐ.எஸ்.ஐ., முத்திரை தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கு உரிமக்கட்டணம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி பெறவேண்டும். பின்னர் நிறுவனங்களில் லேப் அமைத்து, வாரந்தோறும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பரிசோதிக்க வேண்டும்.
மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை ஐ.எஸ்.ஐ.,யின் அங்கீகாரம் உள்ள சோதனை கூடத்தில், இங்கு சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை, பரிசோதனைக்கு அனுப்பி சான்று வாங்க வேண்டும். இந்த அறிக்கைகள், மாதந்தோறும், அ ரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லேப் அமைக்க மற்றும் டெக்னீஷியனுக்கு ஊதியம், பே õன்றவைகளுக்கு ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்சம், மாதம், ஆறு லட்சம் ரூபாய் செலவாகிற து. ஆனால் போலி நிறுவனங்க ள், தரமற்ற ஆர்.ஓ., பிளாண்ட் மூ லம், தண்ணீரை சுத்தம் செய்கின்றன. இவைகள் சுத்தம் செய்யப்ப ட்ட குடிநீரை, எந்த பரிசோதø ன செய்யாமல், கேனில் அடை த்து விற்பனை செய்கின்றன.
இந்நிறுவனங்கள், 20 லிட்டர் கொண்ட கேன் வாட்டரை, 18 ரூபாயிலிருந்து, 24 ரூபாய் வரை விலை வைத்துள்ளன. ஆனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு கேன்கள், 35 முதல், 40 ரூ பாய் வரை விற்கப்படுகின்றன.
குறைந்த விலையில் இருப்பதால், போலி வாட்டர் கேன்கள், விற்பனை படுஜோராக நடக்கிறது. தற்போது மின்வெட்டு, கூலி உயர்வு போன்ற காரணங்களால், உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், போலி நிறுவனங்களால், நாங்கள் தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""போலி நிறுவனங்கள் கேன்களை முறையாகவும், முழுமையாகவும் சுத்தம் செய்வதில்லை. இதனால், பல்வேறு கிருமிகள் சிலிண்டரில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. சுத்தம் செய்யப்படாத கேன்களில் நிரப்பப்படும் நீரை குடிக்கும் போது, நோய் தொற்ற வாய்ப்புள்ளது. நீர் மூலம் பரவும் நோய்களும் ஏற்படலாம். ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட கேன்களில், அடைத்த குடிநீரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது,'' என்றார்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை முறையாக கண்காணிப்பு செய்யாமல் அலட்சியப்படுத்துவதால், தற்போது போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள் அதிகமாகி வருகின்றன. முறைப்படி சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடிப்பதால், பொதுமக்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வருவதால், கேன்களில் அடைத்து சீலிடப்பட்ட மினரல் வாட்டரை வாங்கி, குடிநீராக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கெல்லாம் உரிய தீர்வு கண்டு, பொதுமக்கள் நல்ல, தரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதே பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.