டார்ஜிலிங்: கூர்காலாந்து பகுதி மேற்குவங்க மாநிலத்திற்குட்பட்ட பகுதிதான், தனி மாநிலமாக உருவாக வாய்ப்பே இல்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங், சிலிகுரி, கூர்காலாந்து உள்ளிட்ட சில பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. எனினும் முதல்வராக பொறுப்பேற்ற மம்தா, முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, இப்பகுதியை கூர்காலாந்து ஒன்றிய ஆணையமாக (ஜி.டி.ஏ.)அறிவித்து உத்தரவிட்டார். தற்போது இப்பிரச்னை தீர்ந்து விட்டது.நேற்று டார்ஜிலிங் சென்றிருந்த மம்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: கூர்காலாந்து பகுதி மேற்குவங்கத்திற்குட்பட்டு தான் இருக்க வேண்டும். தனி மாநிலமாக வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு போதும் நடக்காது. இப்பகுதியின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப்பணிக்காக இந்த வருடம் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அரசி்ன் வளர்ச்சிப்பணிகள் இடையூறு இன்றி நடக்கும் என்றார். நிகழ்ச்சியில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கைக்காக போராட்டங்களை நடத்தி வந்த கூர்காலாந்து ஜான் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் பீமல்கூராங்க் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.