அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், நாட்டு நலப்பணித்திட்ட அலகு, அரியலூர் மாவட்ட போலீஸ்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய, என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்கவிழா, தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வை-2023 பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேசிய பெண்கள் தினவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா, அரியலூர் அருகே வாரணவாசி சமுதாய கூடத்தில் நடந்தது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் வேலுசாமி வரவேற்றார். வாரணவாசி பஞ்சாயத்து தலைவர் பங்கஜம் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட குற்ற ஆவன காப்பக பிரிவு டி.எஸ்.பி., இளங்கோவன், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ., வாணி, கீழப்பழுவூர் எஸ்.ஐ.,க்கள் ராமமூர்த்தி, சுமதி உள்ளிட்டோர் பேசினர்.
முடிவில் ஆசிரியர் பயிற்சி மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.