ரசாயன கழிவால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்... தன்மை குறித்து ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அரியலூர்: சுண்ணாம்பு கல் சுரங்க பகுதியில், அபாயகரமான ரசாயன கழிவுகள், சட்ட விரோதமாக கொட்டப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது அப்பகுதியின் சுற்றுப்புற சூழல் மாசுபடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஜெயராமனுக்கு சொந்தமாக, கயர்லாபாத் பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டு பகுதியில், ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. பயிர் சாகுபடி ஏதும் இல்லாமல் தரிசாக கிடக்கும் மேற்கண்ட நிலத்தை, ஜெயராமனின் நண்பரும், ஜெமீன் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவருமான பழனிவேல் என்பவர் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த, எவரெஸ்ட் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு, ஆண்டொன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில், 2012 ஃபிப்ரவரி மாதம் முதல், ஓராண்டு காலத்துக்கு வாடகைக்கு கொடுத்தார்.
சேலம் மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்து கொண்டு வரும், வெள்ளை பவுடரை இருப்பு வைத்து, அரியலூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு விற்பனை செய்யவுள்ளதாக, நில உரிமையாளரிடம் கூறிய, ஓசூர் எவரெஸ்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தார், அங்கு குடோன் அமைக்க தேவையான முன் அனுமதி எதுவும் அரசிடமிருந்து பெறவில்லை.
இந்நிலையில் சுண்ணாம்புகல் சுரங்கங்களுக்கிடையே உள்ள, ஜெயராமனுக்கு சொந்தமான மேற்கண்ட நிலம், பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்டதுடன், அங்கு, 200க்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களை கொண்டு வந்து, தாறுமாறாக போட்டுள்ளதுடன், ரசாயன கழிவுகளை வெட்ட வெளியில் கொட்டியுள்ளது தெரியவந்தது. அந்த பேரல்களிலிருந்து கொட்டி கிடக்கும் ரசாயன கழிவுகள், பெயிண்ட் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள, ரசாயன நச்சு கழிவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அரசிடம் முன் அனுமதி பெறாமல் மேற்கண்ட காட்டு பகுதியை தேர்ந்தெடுத்து, அங்கு ரசாயன நச்சு கழிவை கொட்டியவர்கள் யார்?, அவர்களின் பின்புலம் என்ன?, அந்த கழிவுகளின் தன்மை என்ன? என்ற விபரம் ஏதும் தெரியவில்லை.
இதுகுறித்து தகவறிந்த அரியலூர் ஆர்.ஐ., சந்திரசேகர், வி.ஏ.ஓ., தங்கராசு உள்ளிட்ட இருவரும், நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொட்டி கிடக்கும் ரசாயன கழிவு மற்றும் வெள்ளை மண் உள்ளிட்ட பொருட்களை பாலிதீன் பைகளில் சேகரித்து எடுத்து சென்றுள்ளனர். கயர்லாபாத் பகுதியில் கொட்டப்பட்டுள்ள ரசாயன கலவை, அப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதிப்புக்குள்ளாக்குவதுடன், பொதுமக்களுக்கு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கயர்லாபாத் கிராமத்தின் காட்டு பகுதியில் கொட்டப்பட்டுள்ள ரசாயன கலவை மற்றும் வெள்ளை மண் ஆகியவற்றின் வீரிய தன்மை குறித்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் ரசாயன ஆய்வியல் விஞ்ஞானி ஆகியோருடன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையில், அரியலூர் கலெக்டர் செந்தில்குமார் ஈடுபட்டுள்ளார்.
அரியலூர் அருகே சுண்ணாம்புகல் சுரங்க பகுதியில் சட்ட விரோதமான முறையில் ரசாய கலவை கொட்டி கிடப்பது, கயர்லாபாத், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட கிராம பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்