அரியலூர்: அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் சார்பில், வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட மாணவரணி சார்பில், அரியலூர் செட்டி ஏரிக்கரையில் நடந்த, வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட மாணவரணிச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் அரங்கநாதன், மாவட்ட மாணவரணித் தலைவர் ஜபருல்லா, இணைச் செயலாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது ஜான், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், தலைமை நிலையப் பேச்சாளர்கள் காவேரி, கலீல்பாஷா, அ.தி.மு.க., மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான துரை மணிவேல், மாவட்ட அவைத்தலைவர் கணேசன் பேசினர்.
*அரியலூர் ஆயிரங்கால் மண்டபத் தெருவில், தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த, வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட மாணவரணிச் செயலாளர் எழில்மாறன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் பாலமூர்த்தி வரவேற்றார்.
தி.மு.க., நகர செயலாளரும், நகராட்சி சேர்மனுமான முருகேசன், ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், மொழிப்போர் தியாகி அருணாச்சலம், பேராசிரியர் ராமசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சேலம் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா உள்ளிட்டோர் பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.