கோபிசெட்டிபாளையம்: கடும் வறட்சியால் வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் வறண்டு, வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டி.என்.பாளையம் வனத்துறையின் கீழ் குன்றி, விளாங்கோம்பை, தொட்டக்கொம்பை உள்ளிட்ட வனப்பகுதிகள் அடங்கி உள்ளன. வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வறட்சி காலங்களில் வனத்தையொட்டி உள்ள ஊருக்குள் வன விலங்குகள் புகுந்து விடுகிறது. விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.
யானை உள்ளிட்ட வின விலங்குகள் விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்தையொட்டி இரண்டு மீட்டர் நீளம், இரண்டு மீட்டர் ஆழமுள்ள அகழி கடந்தாண்டு ஆண்டு வெட்டப்பட்டது.
வன விலங்குகள் தண்ணீர் குடித்து செல்லும் வகையில் வனத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. டி.என்.பாளையம் வன சரகத்தில் புஞ்சை துறையாம்பாளையம் வனத்தில் மாகாளி என்ற இடத்தில் இரண்டு தொட்டி, ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையில் இருந்த தண்ணீரை வன விலங்குள் குடித்து சென்றன. கடும் வெயிலால் தடுப்பணை வறண்டு விட்டது. தண்ணீர் குடிக்க வரும் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏமாற்றத்தடன் திரும்பி செல்கிறன.
சத்தி வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், பங்களாபுதூர் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. குன்றி மலைப்பகுதியில் உள்ள கோவிலூர், ஜோரேகெட்டி, இருட்டிபாளையம், பெரியகுன்றி, எக்கத்தூர், போசிபாளையம், நாய்க்கன்தொட்டி, இந்திரா நகர், ரோலெண்ட் நகர் உட்பட பல கிராமப்பகுதிகள் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் வறண்டு விட்டதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் இன்றி, கிராம, நகரப்பகுதிக்குள் படையெடுக்க துவங்கி உள்ளன.
புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:
சென்றாண்டு சராசரியைவிட மழை குறைந்து, கடும் வெயிலால், வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு, மரம், செடி, கொடிகள் காய்ந்தன. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. நீர் வரத்துப்பாதை, தண்ணீர் ஓடும் ஓடைகளில் தண்ணீர் இல்லை. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஒரு மாதத்தில் நான்கு பேர் யானையால் இறந்துள்ளனர். ஐவர் காயம் அடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட ஆடுகள், விலங்கு தாக்கி இறந்துள்ளன. பல நூறு ஏக்கர் நிலங்களை சேதப்படுத்தி உள்ளன.
வறட்சியான நிலையில், கிடைக்கும் நீரைக்கொண்டு, சாகுபடி செய்தும்போது, வனவிலங்கு அவற்றை அழிப்பதால், விவசாயிகளும், மக்களும் கடும் அச்சத்துடன் உள்ளனர்.
இதை தடுக்க, வனக்குட்டைகளை நிரப்ப தற்காலிக மற்றும் நிரந்தர திட்டம் வகுக்க வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.