ஈரோடு: ஈரோடு மாநகரில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டதில், மோட்டார் வாகன விதிமுறையை பின்பற்றாத, 16 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமணசுவாமி உத்தரவுப்படி, ஆய்வாளர் ராமலிங்கம், நேற்று மாநகர பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் ஆட்டோ, ஆம்னி வேன், மினிபஸ், கனரக வாகனங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வாளர் ராமலிங்கம் கூறியதாவது:
ஆய்வின்போது, பல வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், எஃப்.சி., புதுப்பிக்கவில்லை. அதிக பாரம் ஏற்றி வருதல், லைசன்ஸ், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய நான்கு ஆட்டோ, இரண்டு மாருதி ஆம்னிவேன், பத்து கனரக வாகனங்கள் என மொத்தம், 16 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்டது.
மாருதி வேனில் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி. மூன்று பள்ளி குழந்தைகளைச் சேர்த்து, எட்டு பேர் மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். ஆனால், ஒரு மாருதி வேனில், 23 பள்ளிக் குழுந்தைகளை ஏற்றி சென்றனர். இதுபோன்று மோட்டர் வாகன விதிமுறைகளை மீறுபவரை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமணசுவாமி கூறியதாவது:
பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள், குழந்தைகளை ஏற்றிச் செல்ல முறையான அனுமதியை வட்டார போக்குவரத்து துறையிடம் பெற வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், பள்ளி குழந்தைகள் ஏற்றி செல்லும் தனியார் வாகனங்கள், குழந்தைகள் ஏற்றி செல்வதற்கு பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் வாங்கி வரவேண்டும்.
தவிர, மோட்டர் வாகன ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகம், தனது கடிதத்தில், டிரைவர் குறித்த முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.