DISTRICT NEWS | அரசின் இலவச லேப்டாப் வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் இலவச லேப்டாப் வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பவானி ஸ்ரீவாசவி கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் இலவச லேப்டாப், இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக லேப்டாப் வழங்கக்கோரி, கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் தலைவர் பூபதி கூறியதாவது:
இக்கல்லூரியில் மூன்றாமாண்டில், பல்வேறு துறையில், 321 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.
இம்மாணவர்களுக்கு இதுவரை, தமிழக அரசு வழங்க வேண்டிய லேப்டாப் வழங்கவில்லை.
ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் படிப்பு முடித்து, வெளியே செல்ல உள்ளோம். எங்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி, போராட்டம் நடத்துகிறோம், என்றார்.
மறியல் குறித்து தகவல் அறிந்து, பவானி டி.எஸ்.பி., ஆறுமுகம், ஈரோடு தாசீல்தார் சுசீலா மற்றும் வாசவி கல்லூரி முதல்வர் ஜெய்சங்கர் ஆகியோர் மாணவர்களிடம் சமாதானம் பேசினர்.
பின், மாணவர் தலைவர் பூபதி, தமிழ் பேரவை தலைவர் ஸ்ரீதர், செயலாளர் தனபால் ஆகியோர் கொண்ட குழுவினர், அங்கு இருந்து மனு கொடுக்க ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டனர். இலவச லேப்டாப் வழங்கும் பிரிவில் மனுவை வழங்கி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
"மாணவர்களின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மிக விரைவில் லேப்டாப் வழங்க ஆவண செய்யப்படும்' என, அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை