பவானி: பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன், அனைத்து வியாபாரிகள், வியாபாரிகள் சங்கத்தை அழைத்து, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த சில மாதமாக கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது பவானியில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் தடை செய்யப்பட்ட கேரிபேக், பிளாஸ்டிக் கப் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை, அதிக அளவில் டீக்கடை, ஓட்டல், திருமண மண்டபங்கள் போன்றவற்றுக்கு விற்பனை செய்கின்றனர், என புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து, பவானி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் முன்னிலையில், பத்துக்கும் மேற்பட்டோர், நகராட்சி ஊழியர்கள் துணையுடன் கடைகளில் சோதனை செய்தனர்.
பவானி, மேட்டூர் மெயின் ரோட்டில் இயங்கி வந்த பல கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றி, லாரியில் எடுத்துச் சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர, அக்கடை உரிமையாளர்களுக்கு, 6,000 ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறியதாவது:
இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடக்கும். மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், டீ கடை, ஹோட்டல், திருமண மண்டபம் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட கேரிபேக்கை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்கள் டீக்கடை, ஹோட்டல் செல்லும்போது பாத்திரங்கள் கொண்டு செல்ல வேண்டும். மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு பொருள் வாங்க செல்வோர் தேவையான பையை எடுத்துச் செல்ல வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.