Pune politician wears a Rs. 1.25 crore shirt. It is made of gold | தங்க சட்டை அணிந்து பளபளக்க வைத்த பவார் கட்சி பிரமுகர்| Dinamalar

தங்க சட்டை அணிந்து பளபளக்க வைத்த பவார் கட்சி பிரமுகர்

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தங்க சட்டை அணிந்து  பளபளக்க  வைத்த பவார் கட்சி பிரமுகர்

புனே: மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி பிரமுகர் ஒருவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்கத்தால் சட்டை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். வரப்போகும் லோக்சபா தேர்தலில் டிக்கெட் கேட்டு போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச்சேர்ந்தவர் தட்டா பஹே (32).
இவர் சரத்பவாரின் தேசியவாத காங். கட்சியைச்சேர்ந்த உள்ளூர் பிரமுகர். இவர் நேற்று புனே கட்சி அலுவலகம் வந்தார். அப்போது பத்து விரல்களிலும் தங்க மோதிரம், மாலையை கழுத்தில் அணிந்தாற் போன்று தங்கத்தால் செயின்கள், தங்கத்தால் ஆன பிரெஸ்லெட் ஆகியவற்றுடன் முற்றிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட மேல்சட்டையுடன் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் அணிந்து வந்த சட்டையின் ‌எடை 3.5 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.25 கோடி எனவும், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள், உள்ளிட்டவை மொத்தமாக ரூ.7 கோடி என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் வந்ததை கேள்விப்பட்ட மராத்தி மற்றும் லோக்கல் டி.வி. ஊடகத்தினர் அவரை மொய்த்துவிட்டனர். அவரை பல கோணங்களில் வீடியோ எடுத்து தள்ளினர். இது குறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகவே இப்படியொரு வித்தியாசமான காஸ்டியூமில் வந்தேன். மேலும் வரப்போகும் 2014-ம் லோக்சபா தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என்பதே ‌எனது ஆசை என்றார் கூலாக. இது குறித்து சில டி.வி.சானல்கள், மாநிலத்தில் கடும் வறட்சி, வறுமை, பட்டினி,விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செயல்பாடுகள் மக்களை வெறுப்படைய செய்வதாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Reghu Manivasakam - Bangalore,இந்தியா
30-ஜன-201319:32:25 IST Report Abuse
Reghu Manivasakam இவர் ஏன் இப்போ அரசியலுக்கு வர ஆச படறாரு,,, ஒரு தங்க சட்டை போதலையா ?????
Rate this:
Share this comment
Cancel
mukesh karthik - TAMILNADU,இந்தியா
30-ஜன-201316:18:49 IST Report Abuse
mukesh karthik வெறும் முகஸ்துதிக்காக செய்துள்ளார் இவர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜன-201314:52:34 IST Report Abuse
தமிழ்வேல் சந்தனம் மிஞ்சி போச்சி.....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜன-201314:52:14 IST Report Abuse
தமிழ்வேல் ஜெயித்து வந்தபின் சேர்த்த சொத்து என்று கூற முடியாது....
Rate this:
Share this comment
Cancel
BED BUG - doha,கத்தார்
30-ஜன-201314:16:53 IST Report Abuse
BED BUG கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே - தங்க சட்டை போட்டவனும் மண்ணுக்குள்ளே..
Rate this:
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
30-ஜன-201314:00:26 IST Report Abuse
tamilaa thamila கழுத்து மாலையில் எவ்வளவு பெரிய டாலர். மின்னுதே.
Rate this:
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
30-ஜன-201311:02:33 IST Report Abuse
Deepak எத்தனை ஏழைகளின் ரத்தமோ?
Rate this:
Share this comment
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
30-ஜன-201318:21:02 IST Report Abuse
B.Vigneshkumarபணக்காரரை கொடுமைக்கரரக பார்க்கும் எண்ணம் எப்போ போகுமோ...
Rate this:
Share this comment
Cancel
Prasanth Msc - chidambaram  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201308:43:31 IST Report Abuse
Prasanth Msc கண்ணா.... லட்டு(எம்.பி)தி்ண்ண ஆசையா......,
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
30-ஜன-201308:00:00 IST Report Abuse
samuelmuthiahraj ரூபாயையும் சொத்துக்களையும் நகைகளையும் பதுக்கி வைத்து வருமான வரி கட்டாது வாழும் கயவர்களை விட அடுத்தவன் பணத்தை அபகரிக்கும் அயோக்கியர்களைவிட தைரியமாக வித்தியாசமாக வலம் வருவது இவரது சம்பாத்தியம் சரியாக இருக்கும் பட்சத்தில் இவர் பாராட்டுதலுக்குரியவரே
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
30-ஜன-201307:43:49 IST Report Abuse
Nagarajan S ஆமாம் இவரை வருமான வரித்துறையினர் எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்? தேசியவாத காங்கிரஸ் மத்திய அரசின் நட்பு கட்சி என்பதாலா?
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
30-ஜன-201319:49:17 IST Report Abuse
Karam chand Gandhi சரத் பவார் கட்சியே கோடிஸ்வர கட்சி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை