புதுடில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி வரும் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி வரும் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். அதே தேதியில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே முதன் முறையாக இந்தியா வருவதை முன்னிட்டு அந்தோணியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டு அதிகாரிகளிடையே பேசிய பின்னர் முடிவு தெரிவிக்கப்படும் என கூறினர்.
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இருநாட்டு ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதன்படி அமெரிக்காவின் எப்-16,எப்-18 மற்றும் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்கு இணையாக பிரான்ஸ் நாட்டின் ராணுவ தளவாட நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஆயுத கொள்முதலில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அதிபருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தாக உள்ளது. இதன் காரணமாகவே அந்தோணியின் ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.