மதுரை:மதுரை நகரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏதாவது திருவிழா, போராட்டம், ஊர்வலம் நடந்தால், நெரிசலில் சிக்கி விழிபிதுங்க வேண்டியதுதான். அந்த அளவிற்கு நகரம் குறுகியதாக உள்ளது. மாற்றுப்பாதைகள் பல இருந்தும், நகரின் வளர்ச்சிக்கேற்ப மாற்றங்கள் காணாததால், நெரிசல் பிரச்னை இன்னும் தொடர்கிறது.சென்னையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண, 3000 போக்குவரத்து போலீசார் உள்ளனர். ஆனால், மதுரையில் 284 போலீசாரே உள்ளனர்.
1982ல், அப்போதைய வாகனங்களை கணக்கிட்டு, மதுரை நகருக்கு 309 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதிலும், 25 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. இருப்பவர்களை வைத்துதான் போக்குவரத்து பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. சிக்னல்களில், குறைந்த அளவு போலீஸ் இருப்பதால், அவர்களை வாகன ஓட்டிகள் மதிக்காமல், கடப்பதால் விபத்தும்,நெரிசலும் ஏற்படுகிறது.போலீசார் கூறியதாவது:சென்னைக்கு அடுத்து, முக்கிய நகராக கருதப்படும் மதுரையிலும் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து பல முறை அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். ஆனால், இதுவரை பலன் இல்லை. தேவையான எண்ணிக்கையில் ஆட்களை நியமித்தால் மட்டுமே, நகரின் நெரிசலுக்கு விடிவு கிடைக்கும். இதுகுறித்து பட்ஜெட்டில் முதல்வர் அறிவிக்க, கமிஷனர் சஞ்சய்மாத்தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், வைகையின் வடகரைக்கென ஒரு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்தான் உள்ளார். வடகரையில்தான் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை உள்ளதால், ஏதாவது ஒரு சிறு பிரச்னை என்றால்கூட, சமாளிப்பது சிரமம். இதை தவிர்க்க, வடகரைக்கு கூடுதலாக ஒரு இன்ஸ்பெக்டரும், அவருக்கு கீழ் தேவையான போலீசையும் அரசு நியமிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.