Amir film barrier | அமீர் படத்திற்கு தடைகோரி போலீசில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமீர் படத்திற்கு தடைகோரி போலீசில் மனு

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:இயக்குனர் அமீர் இயக்கி, நடிகர் "ஜெயம்' ரவி நடித்து வெளிவரவுள்ள "ஆதிபகவன்' திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள இப்படத்தில், இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் சில காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும்; திரையிடுவதற்கு முன், இந்து அமைப்புகள், கட்சிகளிடம் காண்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று முன் தினம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஐகோர்ட் வக்கீல்கள் புகார் அளித்தனர்.
இதே கருத்தை வலியுறுத்தி, மாவட்டந்தோறும் இந்து அமைப்புகள் சார்பில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர் பார்த்தசாரதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை