திருப்பூர்:தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக, பிப்., 20, 21ல் நடக்கும் நாடு தழுவியவேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்யவேண்டும்,' என திருப்பூரில் நேற்று நடந்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் தவறான
கொள்கைகளை கண்டித்து,மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்., 20, 21ல்,நாடு தழுவிய அளவில் 48மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஆயத்த மாநாடு, திருப்பூர் டவுன் ஹால் அரங்கத்தில் நேற்று நடந்தது. ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தா ர். கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால்,பல லட்சம் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில்,திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் பங்கேற்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்,600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்., 7ல், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், அக்குழுவை கூட்டி விவாதிப்பது,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிற்சங்க நிர்வாகிகள்சுப்பராயன் (ஏ.ஐ.டி.யு.சி.,)
பத்மநாபன்(சி.ஐ.டி.யு.,), ராமகிருஷ்ணன் (எல்.பி.எப்.,), சிதம்பரசாமி (பி.எம்.எஸ்.,), காளிமுத்து
(எச்.எம்.எஸ்.,) உட்பட 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.