சென்னை: சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம் இன்று காலை முதல் மருத்துவமனையாக செயல்படத் துவங்கியது. கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் தலைமைச் செயலகம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது. தொடர்ந்து புதிய தலைமைச் செயலகத்தில் பல்நோக்கு மருத்துவமனை துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை துவங்குவதற்கான பணிகள் நடந்தன. இதன்படி, இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில், தலைமைச் செயலக வளாகத்தில் ஒரு பார்மஸி மற்றும் 2 கன்சல்டிங் அறைகள் திறக்கப்பட்டு, புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. 5 டாக்டர்கள், 10 நர்சுகள் மற்றும் 12 மருத்துவமனை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.