திருநெல்வேலி: விவசாயிகள் தற்கொலையை தடுக்கக்கோரி வைகோ ஆர்ப்பாட்டம், ராமதாஸ் வருகை, விஸ்வரூபம் திரைப்பட பிரச்னை என திருநெல்வேலி நகரம் பெரும் பரபரப்பில் திண்டாடி வருகிறது. நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரியும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நெல்லை ஜங்ஷன் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் நெல்லையில் நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நெல்லை வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடக்கவுள்ள ஓட்டல் முன்பாக தலித் அமைப்பினர் குவிந்துள்ளனர். இதே போல், விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பாக ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த அனைத்து விஷயங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல்லை நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.