சென்னை: தனக்கு மதச்சார்பற்ற இடம் தேவை என்றும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் தமிழகத்தை விட்டு வெளியேறத்தயார் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தின் களம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இது எப்படி இந்திய முஸ்லிம்களை பாதிக்கும் என நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்னைகள் குறித்து சென்னையில் நடிகர் கமல் நிருபர்களுககு பேட்டியளித்தார். அவர் பேசும் போது, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை, தடை என கூறுகிறார்கள். விஸ்வரூபம் திரைப்படத்தின் களம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இது எப்படி இந்திய முஸ்லிம்களை பாதிக்கும். இந்த படத்திற்காக நான் எனது சொத்து முழுவதையும் கொடுத்துள்ளேன். தற்போது எனது வீடு எனதல்ல. இப்படம் திரையிடப்படாவிட்டால் இந்த இடத்தை நான் அவர்களிடம் கொடுத்து விட வேண்டும். நாட்டின் ஒற்றுமையே எனக்கு முக்கியம். மனதில் சரியென்று படுவதை செய்யக்கூடியவன் நான். என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். ஒருவேளை எனக்கு ஒரு மதசார்பற்ற இடம் கிடைக்க வில்லை என்றால் தமிழகத்தை விட்டு வெளியேறத்தயார். என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் என்று சொல்ல வேண்டாம். தமிழ் நாட்டில் மட்டும் தான். யாரோ ஒரு சிலருக்காக நீங்கள் ஏன் வெளியேறவேண்டும். இது நீங்கள் பிறந்த மண். இது ஜனநாயக நாடு. உங்கள் கருத்துக்களை தைரியமாக பதிவு செய்யுங்கள். நீதி உங்களுக்கு கிடைக்கும். நடுநிலையானவர்கள் உங்கள் துணை இருப்பார்கள். நீங்கள் வெல்வது உறுதி. வாழ்த்துக்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.