சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வின் பெயர், மாநில குடிமைப் பணித்தேர்வு என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணையை வெளியிட்டார். 27 துறைகளில் உள்ள 35 பதவிகளில் உள்ள 10 ஆயிரத்து 105 காலி பணி யிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளன. மேலும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு பெயர், மாநில குடிமைப் பணித்தேர்வு என மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், இதுவரை குரூப் 2 பிரிவில் இருந்த தலைமை கல்வி அதிகாரி, சப் ரெஜிஸ்ட்ரர், முனிசிபல் கமிஷனர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசர் மற்றும் அசிஸ்டென்ட் கமர்சியல் டாக்ஸ் ஆபிசர் பணியிடங்கள் தற்போது குரூப் 1 பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.