தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறித்த போலீஸ்காரர் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் செல்வி (24). இவர் நேற்று மாலை அனுமன்நகர் சென்ற போது பைக்கில் வந்த 3 பேர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயினை பறித்து சென்றனர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் காவேரிமணியன் என்பவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிவது தெரிய வந்தது. மேலும் இது போன்று வேறு புகார் எதுவும் உள்ளதா என தொடர் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.