Kamal addresses fans | அமைதி காக்கவும் : ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைதி காக்கவும் : ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அமைதி காக்கவும் : ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

சென்னை : விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது, வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார். இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களை, கமலிடம் அளிக்க அங்கு வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபத்து அபாயம் : தனது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி படத்திற்கு மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்தனர். இந்த தடையை விலக்கக்கோரி கமல் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். படத்தை தனி நீதிபதி வெங்கட்ராமன் பார்வையிட்டு, படத்திற்கு தடையை நீக்கி உத்தரவிட்டார். எனினும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்தனர். மேலும், இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் பிப்., 6 ம்தேதி நடக்கும் என்றும் தெரிவித்தனர்.


இதனிடையே, இன்று காலை நிருபர்களை சந்தித்த நடிகர் கமல், தனக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், தான் ஒரு மதச்சார்பற்ற இடத்திற்கு செல்ல விரும்புவதாகவும், தமிழகம் தன்னை புறக்கணிப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் நடிகர் கமலை முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், "எனது குடும்பம் என்னை சந்தித்துள்ளது. எனது வண்ணம் மற்றும் எண்ணம் அறிந்தவர்கள் அவர்கள். ஒரு சில கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருந்தாலும் அதை நாங்கள் சுமூகமாக பேசி, குறிப்பிட்ட சில காட்சிகள் யாருடைய மனதையாவது புண்படுத்துவதாக இருந்தால் அதை நீக்க சம்மதித்துள்ளேன். இனி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. வாக்குவாதமும் இல்லை. அதாவது எனது முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது படத்திற்கும் இடையே எந்த பிரச்னை இல்லை. இந்நிலையில், வேறு சில விபரீதமான செய்திகள் என்னை வந்தடைந்துள்ளன. அது எனக்கும், எனது ரசிகர்களுக்கும், ஏன் நாட்டுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி அது. எனது குடும்பம், எனது முஸ்லிம் ரசிகர்கள் மற்றும் எனது மற்ற ரசிகர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை. அரசின் கடமை மற்றும் காவல்துறையின் கடமை" என்று தெரிவித்துள்ளார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elavarasan - Manama,பஹ்ரைன்
31-ஜன-201301:00:07 IST Report Abuse
elavarasan இசுலாமிய நண்பர்களே . உங்களுடைய மன நிலைமை நன்றாக புரிகிறது ஆனால் நமது மீனவ மக்களில் இந்து, முஸ்லிம்,கிறித்துவர் இருக்கிறார்கள் தினம் தினம் எதனை பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லபடுகிறார்கள் அதை கேட்க யாரும் முன்வரவில்லை, எங்கே போனார்கள் இந்த முஸ்லிம் அமைப்புகள், தேச பற்றை விட மதப்பற்றுதான் இவர்களுக்கு அதிகம் உள்ளது போல தெரிகிறது.கமலுக்கு எதிராக காட்டும் அக்கறையை கொஞ்சம் நமது நாட்டு மக்கள் மீது காட்டுங்கள், அப்பொழுது பார்க்கலாம் உங்கள் செல்வாக்கை என்ன?...
Rate this:
Share this comment
Cancel
Sathy - Kanyakumari,இந்தியா
31-ஜன-201300:47:12 IST Report Abuse
Sathy கமல் அவர்களே ஏன் மும்பை செல்ல வேண்டும் .... என் அமெரிக்க செண்டிர்கள் ....இங்கே இருந்து பிரச்சன்னை முடிந்த பிறகு எங்கே வேண்டும் எண்டாலும் போகலாமே .....உங்களுக்கும் .. திட்டார் உரிமை அலற்களுகும் உள்ள சண்டையில் ஏன் மக்களை முட்டாள்கள் அக்குகிரிகள் .........இதற்கு வேறு முசில்ம் பேரில் நீங்கள் தான் கலவரம் செய்கிறீர் கள்......உங்கள் ரசிகர் கள் நங்கள் தான் பாவம் ...... இந்த நாடகங்கள் இன்னும் எதனை நாளோ .....ஒரு சின்ன வேண்டுகோள் ஒரு ரசிகனாக தயவு செய்து அரசியல் விளையாட்டில் விழுந்து விடர்திர்கள்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-201318:17:32 IST Report Abuse
Baskaran Kasimani தமிழக அரசு கமலிடம் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டதற்கு காரணம் சிறிது சிறிதாக வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Chennai,இந்தியா
30-ஜன-201317:45:05 IST Report Abuse
Suresh Thalaiva kamal dont worry.. தமிழ்நாடு உங்கள் பக்கம்.. 2014 தேர்தலில் ஆப்பு வையுங்கள்.. யாருக்கு என்பது உலகத்துக்கே தெரியும் உலக நாயகனே..
Rate this:
Share this comment
Cancel
sinthippavan - amaithippoonga ,சவுதி அரேபியா
30-ஜன-201317:30:50 IST Report Abuse
sinthippavan எங்கள் அன்பு இந்திய உடன் பிறப்புகளே, ஏன் எங்களை ஓரம் தள்ளுகிறீர்கள் ? ஏன் எங்கள் மனதின் கஷ்டத்தை அறிய மறுத்துக்கொண்டு உள்ளீர்கள் ? நாங்கள் செய்யும் தவறுதான் என்ன? ஏன் எங்களை அந்நிய படுத்துகிறீர்கள்? கேவலம் ஒரு நூறு கோடி செலவில் ஆன திரைபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதக்காகவா நூறு கோடி முஸ்லீம்களின் உணர்வை உடைத்து எறிகிறீர்கள் ??? உங்கள் மன நிலையயை கெடுத்து பணம் சேர்க்கும் ஒரு கூட்டத்துகாகவா உங்கள் கூடவே இருக்கும் நண்பனின் நம்பிக்கையை பொய் ஆக்க முயற்சி செய்கிறீர்கள் ??? உங்களுக்கு மார்க்க ரீதியான நேர்வழியை இறைவன் காட்டவேண்டும் என்று உங்களுக்காக தினமும் ப்ராத்தனை செய்யும் உங்களின் ரத்த உறவுகளையா நீங்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள் ??? முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொன்னால்தான் நீங்கள் தேசியவாதிகள் ஆக முடியுமா ? இல்லை என்றால் நாங்கள் எங்களின் மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்று சொன்னால்தான் எங்களையும் தேசியவாதி என்று சொல்வீர்களா ??? எங்களிடம் நீங்கள் எதிர் பார்பதுதான் என்ன ??? திரையில் என் இனத்தை தீவிரவாதி என்று சொல்லும்போது நாங்களும் உங்களுடன் சேர்ந்து கை தட்டி விசில் அடிக்கவேண்டும் என்று ஆசை படுகிறீர்களா??? எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றாலும், தயவுசெய்து குரல் கொடுத்துக்கொண்டு இருக்கும் குரலின் நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள், அதில் இருக்கும் உண்மையை புரிய முயற்சி செய்யவும் இன்னும் எத்தனை காலம்தான் நாங்கள் அமைதியை காக்க முயற்சி செய்வது ?ஒன்று படுவோம்..தேசத்தை காப்போம்..
Rate this:
Share this comment
elavarasan - Manama,பஹ்ரைன்
31-ஜன-201301:05:58 IST Report Abuse
elavarasanசிந்திப்பவரே .. நாங்கள் முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை மாறாக திவிரவதிகளில் சிலர் முஸ்லிம்கள் என்றுதான் சொல்கிறார்கள் அதை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள். வாழ்க ஜனநாயகம்....
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-ஜன-201317:14:47 IST Report Abuse
s.maria alphonse pandian கமல் கூறுவது உண்மை...இன்று திரை அரங்குகளில் கரை வேட்டி குண்டர்கள் புகந்து கலவரம் செய்து விட்டு பழி என்னவோ இஸ்லாமியர்கள் மீது வந்துள்ளது....அது போல கமலின் குடும்பத்தினரையையும் இந்த கரை வேட்டிகள் ஏதாவது செய்து விட்டு பழியை இஸ்லாமியர்கள்மேல் போட்டு விடும் அபாயம் உள்ளது ..எனவே மத்திய போலிஸ் காவல் கொடுக்கப்பட வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
30-ஜன-201317:00:00 IST Report Abuse
வடக்குபட்டி ராமசாமி அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் வராமல், சொல்லாமலேயே இருந்தவர் வந்து விடுவாரோ.. ? இல்லை இந்த அரசே வர வைத்து விடுமோ .. வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவன்..
Rate this:
Share this comment
Cancel
Madurai - Madurai,இந்தியா
30-ஜன-201316:51:27 IST Report Abuse
Madurai சிறுபான்மியர் என்று கூறி நாட்டில் உள்ள பெரும்பான்மையினர்களை மதத்தின் பெயரால் பயமுறுத்தி ,அதனை அரசியலாக்கி குளிர் காயும் கயவர்கள் அதிகம் உருவாகி விட்டார்கள் என்பது தெளிவாக இந்த பிரச்னையில் தெரிகிறது.கமல் என்பவர் மதசார்பற்றவர் என்பதால் இது பெரிதாகவில்லை,ஆனால் எதிர்காலத்தில் இதே பிரசினை வேறு ஒருவருக்கு வந்து அவர் மதத்தின் துணையை நாடினால் இது எவ்வளவு பெரிய கலவரமாக மாறும் ( குஜராத் கலவரத்தையும் தாண்டி ) என்பதை இந்த முட்டாள் அரசு சிந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது. இஸ்லாமிய தோழர்கள் கூறுவதற்கு ஒரு குஜராத் கலவரம்( இதை யாரும் ஆதரிக்க வில்லை ) மட்டுமே கிடைகிறது. ஆனால் தினம் தினம் அவர்கள் சார்ந்த மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களால் தீவிரவாதம் என்ற பெயரால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று கொண்டு இருப்பதை நீங்கள் ஒத்து கொண்டு தான் ஆகவேண்டும்.ஆப்கனிஸ்தான் இஸ்லாமியர்களோடு நீங்கள் ஒப்பிட்டு உண்மையான ISLAMIYARKALAI ASINGAPPADUTHATHEERKAL. நீதிமன்றத்தை மதிக்கும் நீங்கள்,அமைதியை விரும்பும் நீங்கள்,நீதிமன்றம் தடையை நீக்கிய பிறகும் படம் வெளியிடும் தியேட்டர் களில் பெட்ரோல் குண்டு போட்டும்,கலவரத்தை தூண்டுவது நன்றாகவா இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஜன-201316:51:25 IST Report Abuse
Nallavan Nallavan எந்தக் குடும்பம்? ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-ஜன-201316:49:26 IST Report Abuse
சு கனகராஜ் அப்படி நீங்கள் பயப்படும் அளவிற்கு எதுவும் நடக்காது. நீங்கள் கடவுள் பக்தி இல்லாதவராக இருந்தாலும் ஆண்டவன் உங்களை கை விட மாட்டான். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை