Karunanidhi found why govt., oppose Viswaroopam | பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013 | கருத்துகள் (274)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Karunanidhi found why govt., oppose Viswaroopam பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

சென்னை: விஸ்வரூபம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறார் என உண்மை வெளியே வந்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் தடையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை. ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார். பெரியார் அடிக்கடி பூனை வெளியே வந்து விட்டது என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது".


இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்தது.


விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (274)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
31-ஜன-201317:40:26 IST Report Abuse
Sundeli Siththar இன்னும் ஒரு சாரார், நீங்களும் கமல் அவர்களும் கைகோர்த்து இந்த அரசுக்கு தலைவலி ஏற்படுத்தவேண்டும் அதே சமயம் அவருடைய படத்திற்கு நல்ல விளம்பரம் கிடக்கவேண்டும் என்று போட்ட நாடகம் என்கின்றனர். எதற்க்கெடுத்தாலும் கருத்து சொல்லும் நீங்கள், இந்த விஷயத்தில் ஒரு வாரத்திற்கு சும்மா இருந்தபோதே ஒரு டவுட் இருந்தது... இன்று உங்கள் கருத்தை படித்த பின்பு பூனைக் குட்டி உங்கள் மடியிலிருந்து வெளியே வந்துவிட்டது தெரிகிறதே...
Rate this:
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
01-பிப்-201313:32:54 IST Report Abuse
P. Kannansuperb Mr H . Narayanan .........
Rate this:
Share this comment
Cancel
Shanmugam Perumal - Coimbatore,இந்தியா
31-ஜன-201316:46:03 IST Report Abuse
Shanmugam Perumal karunanidhi avaregal eppothum thubam poduvathil vallavar, avar thevai ral periyarai thunaiku illupar, karuppu sattai poduvar. Vam ral kazatti vittu viduvar. Motha DMK viyum thannudia kudumba sothakki makkalaium DMK virkaga kadinamaga ulaithavargalaium nadu rottil vittavar karunanidhi.
Rate this:
Share this comment
Cancel
arul hi - madurai,இந்தியா
31-ஜன-201314:39:12 IST Report Abuse
arul hi எது எப்படியோ . கமலஹாசன் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைச்சாச்சி. எல்லாரும் குடும்பமா தியேட்டர்ல போய் படம் பாருங்க . படம் சூப்பர் ஹிட் ஆகும். நோ திருட்டு vcd ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
neelakantan s - mumbai,இந்தியா
31-ஜன-201311:16:43 IST Report Abuse
neelakantan s இந்த சேற்றை வாரி இறைக்கும் கலாசாரம் என்று ஒழியுமோ அன்று தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-ஜன-201310:44:43 IST Report Abuse
Rangarajan Pg ஒரு திரைபடத்தை திரைப்படமாக பாருங்களே முஸ்லிம் தோழர்களே, எதற்கு இவ்வளவு கெடுதல் விளைவிக்கிறீர்கள்? இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறீர்கள். நீங்களே அந்த திரைபடத்திற்கு தேவைக்கு அதிகமாக விளம்பர MILEAGE வாங்கி கொடுத்து விடுவீர்கள் போல தெரிகிறது. ஒரு திரைபடதினால் உங்கள் மதத்தின் பெயர் களங்கப்பட்டு விடுமா? இது ஒரு திரைப்படம், முடிந்தால் பாருங்கள் அல்லது IGNORE செய்யுங்கள். உங்கள் சமூகத்திற்குள் அதை பற்றி விமர்சித்து, சரியில்லை என்றால் அந்த திரைப்படத்தையே உங்கள் சமூகம் புறக்கணிக்கட்டும். அதை விட்டு இப்படி பிரச்சினைகளை கிளப்புவதால் யாருக்கு என்ன பயன்? மற்ற நாடுகளில் இந்த திரைப்படம் எந்த வித தடங்கலும் இல்லாமல் போகிறதாம். அங்கெல்லாம் உங்கள் மதத்தவர் இல்லையா. மலேசியாவிலேயே இந்த படம் திரையிடப்பட்டு ஓடி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது ஒரு முஸ்லிம் நாடு. அங்கேயே திரைப்படம் வெளியிடப்பட்டு ஓடி கொண்டிருக்கும்போது உங்களுகென்ன வந்தது?? ஒரு மதத்தின் பெயரால் திரைப்படங்களை வெளியிடமுடியாமல் தடுப்பது அநியாயம். இதை போன்ற ஒரு அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா? வேறு வழி இல்லாமல் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. தேவையா இது? திரைப்படங்களை திரைப்படங்களாக பாருங்கள்.
Rate this:
Share this comment
Sheik Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201301:18:02 IST Report Abuse
Sheik Mohamedஎன்னங்க சார் இது போன்ற அக்கிரமம் உலகில் எங்கயாவது நடக்குமா என கேட்கிறீர்... இதற்க்கு முன்னாடி டேம் படம் தமிழ் நாடு அரசால் தடை செய்யப்பட்டது அப்போது இங்க உள்ள எந்த தமிழ் நாடிகரும் கமல் உள்பட அந்த படத்திற்கு சார்பா யாரும் குரல் கொடுக்க வில்லை அப்போது எங்கே போயிட்டு கருத்து சுதந்திரம்.... அந்த ஒரு படத்தினால் தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் பிரச்சினை வருமா என்ன... தமிழ் நாட்டு மக்கள் என்ன அந்த திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க மாட்டார்களா என்ன திரு.ரங்கராஜன் அவர்களே.. ...
Rate this:
Share this comment
vinoth - chidambaram,இந்தியா
04-பிப்-201308:29:46 IST Report Abuse
vinothஅதில்.. அவங்க நல்லா இருக்குற முல்லை பெரியார் dam உடையறது போல காட்னங்க . கேர்ள govt சொன்னதும் அந்த பொய் காரணத தான் . விஸ்வருபம் ல இந்தியன் முஸ்லிம பத்தி ஏதும் தப்பா சொல்லலையே @ஷேய்க் மொஹெமத் நண்பரே ....
Rate this:
Share this comment
Cancel
sasikumar - Chennai,இந்தியா
31-ஜன-201310:38:40 IST Report Abuse
sasikumar இது ஒரு பெரிய சறுக்கல் தான்.... சிறுபான்மை ஒட்டுக்களை நம்பி, பெரும்பான்மை ஓட்டுக்களை இழக்க போகிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-ஜன-201310:26:18 IST Report Abuse
Rangarajan Pg கலைஞரே நீங்களே ஒரு கலைஞர் மற்றொரு கலைஞனுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் என்று கூட இதை எடுத்து கொள்ள முடியவில்லையே. நீங்கள் இதை அரசியலுக்காக தான் பயன்படுத்துகிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. ஊதி பெரிது படுத்தவே நீங்கள் அறிக்கை கொடுக்கிறீர்கள் என்று புரிகிறது. இல்லை என்றால் ஒரு இருபத்தி ஐந்து வருடங்கள் முன்னால் நடந்ததாக நீங்கள் சொல்லும் நிகழ்வை தற்போது வெளியே சொல்வீர்களா? இது தமிழக அரசுக்கும் கமலுக்கும் நடக்கும் பிரச்சினை. அரசியலுக்கு இதில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. இதை கொண்டு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். ரெஸ்ட் எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
31-ஜன-201310:07:55 IST Report Abuse
P. Kannan உங்கள் கட்சிகாரர், உங்கள் அன்புத்தம்பி வைகோ வை நீங்கள் கதறடித்தது இந்த நாடே அறியும். தனிமனிதனை உங்களை போன்று வறுப்பவர்கள் யாராவது உண்டா???
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-ஜன-201310:02:46 IST Report Abuse
Rangarajan Pg இதில் கூட தலைவர் கொடி நடுவதற்கு பார்க்கிறார். எந்த கிரவுண்டு கிடைக்கும் எப்படி மேயலாம் என்று பொழுதன்னைக்கும் யோசித்த வண்ணம் இருப்பார் போல இருக்கிறது. அந்த விழாவில் கமல் GENERAL TOPIC ஆக, ஒரு தமிழர் பிரதமராக வர வேண்டும் என்று கூறும் நோக்கில் ""வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும்"" என்று பேசி இருப்பார். இதை நமது தமிழின தலைவர் அதை அப்படியே தனது சாதுர்ய சாணக்ய மூளையை பயன்படுத்தி ஜெயாவுக்கு எதிராக அதை திருப்பி விட்டு விட்டார். ""வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்றால் சேலை கட்டிய தமிழர் பிரதமராக வர கூடாதா??"" என்று வில்லங்க கேள்வியை திருப்பு கேட்டு இன்று கமலை சிக்கலுக்குளாக்கி விட்டார் என்றே தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் இந்த கருணா கிடைக்கும் விஷயத்தில் எல்லாம் ஸ்கோர் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். பிறகு விக்ரம் பட விழா தொடர்பாக ஜெயா எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியதை இவர் தான் COPY WRITE செய்தது போல,, பக்கத்தில் இருந்து பார்த்தது போல அப்படியே சொல்கிறாரே. ஒரு வேலை அவர்கள் பேசும்போது பக்கத்தில் குடை பிடித்து கொண்டு நின்றிருந்தாரோ? இருந்தாலும் இருக்கும். இன்று தானே அவர் தமிழின தலைவர் மற்றும் கலைஞர் . ஒரு இருபத்தி ஐந்து வருடங்கள் முன்னாள் அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதியாக தானே இருந்திருப்பார். அது சரி கலைஞரே, அழகிரி போஸ்டர் யார் அடித்தது, யார் கட்சியின் பெயருக்கு புதிதாக இழக்கு கொண்டு வந்தது என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்து விட்டீர்களா? முதலில் அதை கவனியுங்கள். கட்சியின் பெயர் ஏற்க்கனவே வழுக்கி விட்டது. இதில் புதிதாக ""இழக்கு"" வேறு வந்து விட போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
31-ஜன-201309:54:25 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy அன்பார்ந்த என் இனிய தமிழ் மக்களே எந்த பூனை வெளியே வந்துவிட்டது? கிழட்டு பூனை திருட்டு பூனை ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடும் பூனை சுயநலவாத பூனை தான் ஆடிய ஆட்டத்தை மறந்து தன்னுடைய வேலைகளை மற்றவர்களும் செஇதுட்டார்கல் என்று சந்திலே சிந்து பாட நினைத்து தான் போட்ட அத்துணை திட்டமும் காலியாகிவிட்டதே என்ற கலக்கத்தில் ஏதோ உளறுகிறார் தசாவதார பிரச்சினையில் எங்கு போனார்? படத்திலேயே ஜயாவை காட்டினாரே (இவரை வெறும் மாறுவேஷத்தில் மட்டுமே காட்டினார்) அதை கூட சகிக்கமுடியாமல் தன்னுடைய குடும்ப தொலைகாட்ச்சியில் அந்த சீன் கட் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன் இவரை போல கீழ்த்தரமாக நடக்கவேண்டிய நிலையில் எங்கள் முதல்வர் இல்லை எவ்வளவு அராஜகம் நடத்தினார்கள் இவருடைய ஆசியுடன் இவ்வளவு கூறும் பூனை ஏன் படத்திலுள்ள காட்ச்சிகளை வெட்ட சொல்லவில்லை? ஏன்னா தன் குடும்ப வருமானம் போய்டுமே (எவ்வளவு theatre இவருடைய குடும்பம் கொன்றோலில் உள்ளதோ ?) சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்துட்டாரே மூக்கறுந்து நின்ற சூற்பனகைபோல் காட்ச்சியளிப்பார் விரைவில் எங்கப்பன் குதிருக்குலே என்று kaatti கிட்டார் எங்களுக்கு ஒன்னு புரியுது இத்துணைக்கும் பின்னாலிருந்து இயக்குகிறாரோ? அரசின் பிடிவாதத்தில் உண்மை அதுவே அரசியல் லாபம் பார்க்க நினைப்பவர் இவர்தான் எப்போதும் நிச்சயம் தேர்தலுக்கு பின் ஜெயா பிஜேபி பக்கம் போவார் அப்போது நிச்சயம் மிநோரிட்டி ஒட்டு போய்டும் ஆகையால் அதுக்காக இந்த படத்தை தடை செய்யவில்லை இந்த ஆள பிடிச்சு லாடம் கட்டினால் வெளியேவரும் பூனையின் திருட்டு திட்டம். ஜெயா செய்வாரா? செய்யணும் சதி திட்டங்கள் உலகுக்கு தெரியனும் Gentlemen படத்துல காகர்லால் திட்டம் மாதிரி இல்லை சமீபத்திய விஜய் படத்திலுள்ள ஒரு உள்துறை அமைச்சரின் திட்டங்கள் போல ஏதோ நடந்துள்ளதோன்னு நினைக்க தோணுது? இந்த ஆட்ச்சியை கலைக்க ஒரு மாபெரும் ஆணாதிக்க சக்திகள் பின்னிய வலையில் சிக்கியது ஒரு நடிகன் மட்டுமே மற்றவர்கள் ஒளிந்துள்ளனர் வெளியே எடுத்து காட்டனும் தொளுரித்துடனும் ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களின் உள்ளத்தில் விஷம் விதைத்துட்டார் இந்த ஆள் என்றால் அதுக்கு பதில் கூடிய விரைவில் வரும் ஏன் நேற்று கூட அமீர் படம் தடை செய்ய பட்டுள்ளது அதை ஏன் பெரிதாக்களை? இன்னும் எவ்வளவோ படங்கள் நம் நாட்டில் pala பகுதியில் தடை செய்ய பட்டன அப்போது என்ன ஜெயலலிதாவா செய்தார்? ஏன் Dam 999 தடை செய்தது செல்லும் என்றார்களே கோர்ட் அப்போது இந்த திவாரி ஏன் எதிர்களை? உள்துறை அமைச்சர்கூட படத்துக்கு ஆதரவுன்றார் இதையும் கவனமாக எடுத்துகொண்டு பார்த்தாலே இந்த ஆட்ச்சிக்கு எதிராக மிகபெரிய சதிவலை எங்கேயோ பின்னபட்டுலதோன்ர அட்சம் உள்ளது ஆகையால் நீதிபதி கூறியதுபோல தனிமனித சுதந்திரத்தைவிட நாட்டு ஒற்றுமையே முக்கியம் சும்மா கண்ணா பின்னான்னு படம் எடுத்துட்டு புலம்ப கூடாது MF ஹுசைன் வெளியேறியது எதனால்? Yaar அவரை கீழ்த்தரமாக படங்கள் வரைய சொன்னது? தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஏன் அவ்வாறு நடந்தது? ருஷ்டிக்கு ஏன் அவ்வாறு நடந்தது? இவர்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை என்றால் இல்லை உலகத்துல எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் ஒன்னும் ஆகிடபோகாது தினமும் இந்தியாவில் பொழைப்பு தேடி மாநிலம் விட்டு மாநிலம் போகிறார்கள் அவ்வளவே ஏன் தினமும் வெளிநாட்டுக்கே போகிறார்கள் அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள் தன suya நலனுக்காக ஆகவே இந்தியா ஒன்னும் குறைந்துவிடாது சும்மா அழுதா ஒன்னும் ஆகாது தான் விதைத்தது விஷ விதை தான் தான் அதை அருக்கனும் இதை நன்றாக உணரனும் எல்லோரும் சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு இந்த கிழட்டு பூனை மாதிரி எழுதகூடாது தினமும் எவ்வளவோ படங்கள் வெளிவருகின்றன எல்லாத்தையுமா தடை பண்ணுகிறார்கள் படம் edukka பட்டது ஆப்கானிஸ்தான் America என்றால் இந்த படம் ஏன் நம் நாட்டில் வெளியிடனும்? முதலில் theatre DTH தகராறு வந்ததே அப்போது ஏன் இந்த kizhattu பூனை வாய்மூடி கிடந்தது? திடீர்னு குண்டை வீசவேண்டிய அவசியம் என்ன? கமல் MGR மறைந்த பின்னால் 3 முறை ஜெயலலிதா என்ற முதல்வரை அடிக்கடி சந்தித்துள்ளார் எவ்வளவோ படங்கள் நபித்துள்ளார் ஒரு பிரச்சினையும் கண்டுபிடிக்கலை ஆனால் இப்போது இந்த கிழட்டு பூனை மணி கட்டிவிட்டு அது ஒளிக்காமல் ஆனபின்பு ஏதோ அருந்த பூனையாக அலறுகுறார் இவர் கூறிய அத்துணைக்கும் kamalthaan விளக்கனும் ஏன் என்றால் இவரோட பர்சனல் மட்டேரை மற்றவர்கள் koora கூடாது சொல்லுவாரா கமல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை