பந்தலூர்: 'தூய்மையான கிராமங்கள் உருவாக சுகாதார பணியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
நெல்லியாளம் நகராட்சியில் சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. நகரமன்ற தலைவர் அமிர்தலிங்கம் வரவேற்றார். சி.டி.ஆர்.டி. இயக்குனர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.
சென்னையை சேர்ந்த "எக்னோரா' நிர்வாகி விஜய்ஆனந்த் பயிற்சி அளித்து பேசுகையில்,""நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் போதே ஒவ்வொரு வீடுகளிலும் மட்கும், மட்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் வகையில் வீடுகள், கடைகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு, துப்புரவு பணியாளர்களும், வார்டு கவுன்சிலர்களும் ஒத்துழைத்தால் நெல்லியாளம் நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற இயலும்,'' என்றார். சி.டி.ஆர்.டி., அமைப்பின் செந்தில்குமார் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.