சென்னை:ஐ.பி.எல்., போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் முதல் முறையாக பிப். 3ம் தேதி அன்று நடக்க இருக்கிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏப்., 3ம் தேதி துவங்கி மே 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில், பங்கேற்கும் வீரர்கள் ஏலம் முதல் முறையாக சென்னையில் பிப். 3ம் தேதி நடக்கிறது.இதில், தற்போது உள்ள வீரர்களின் ஒரு சிலரது ஒப்பந்தம் முடிவடைகிறது. ஏலத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்கள் உட்பட உள்ளூர் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.பாகிஸ்தான் அணி இந்தியா பயணம் செய்து, போட்டிகளில் பங்கேற்று விளையாடியதால், பாக். வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில். காஷ்மீரில் ராணுவ வீரர் கொலை செய்ததால் ஏற்பட்ட பரபரப்பால் பாக். வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க இருந்த கனவு பலிக்காமல் போனது. இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா கடந்த முறை எட்டு கோடிக்கு மேல் சென்னை அணி அவரை, ஏலம் எடுத்தது. இந்த முறை 10 கோடிக்கும் மேல் ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.