பொள்ளாச்சி:தமிழகத்தில், உள்ள கிராம சாலைகளில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் மண்சாலைகளை, மாநில நிதி குழு மானிய திட்டம் மூலம் தார் சாலைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றியத்தில், தலா ஒரு ஊராட்சி ரோடு வீதம் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மொத்தம் 385 ஒன்றியங்களுக்குட்பட்டு 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மொத்தம் 79 ஆயிரத்து 394 "குக்' கிராமங்கள் உள்ளன. இவற்றில், பல ரோடுகள் உருக்குலைந்துள்ளன. வாகன போக்குவரத்துக்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோடுகள், மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில், 10 சதவீதத்தை மாநில நிதி குழு ஆணையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியை தகுந்த முறையில் பயன்படுத்தும் வகையில், மாநில நிதி குழு மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கிராம மண் ரோடுகள் மேம்படுத்தப்படவுள்ளன.
இதற்காக, மாநிலம் முழுவதும் ஒன்றியத்துக்கு தலா ஒரு ஊராட்சிகள் ரோடுகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, தார் ரோடாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி ரோடுகளின் நிலையை பொறுத்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தாலுகாவில், வடக்கு ஒன்றியத்தில், தாளக்கரை ஊராட்சியில், காளிபாளையம் - ஜலத்தூர் செல்லும் மண் ரோடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோடு 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது. தெற்கு ஒன்றியத்தில், கோமங்கலம்புதூர் ஊராட்சியில் உள்ள மண் ரோடு 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த ரோடுகளுக்கான பணிகளை துவங்க நிர்வாக உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "கிராம ரோடுகளை சீரமைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, நபார்டு திட்டம் மூலம் ஒரு சில ஊராட்சிகளின் ரோடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் தேர்வு செய்த ஊராட்சிகளில், நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும். இதுபோல், மற்ற ரோடுகளின் பணியும் விரைவில் நிறைவு செய்யப்படும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.