திருநெல்வேலி:வனக்குழுவிடம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் சுற்றுச்சூழல் வனக்குழு செயல்படுகிறது. குழுவின் சார்பில் கோயில் கட்ட வனத்துறை 34 ஆயிரத்து 400 ரூபாய் ஒதுக்கியது. இந்த நிதியை வனக்குழுவினரும், வனத்துறை ரேஞ்சராக பணியாற்றிய பால்ராஜ் என்பவரது பெயரிலும் இணைந்து வங்கி கணக்கு துவக்கப்பட்டிருந்தது. கோயில் கட்ட கடைசியாக நான்காயிரம் ரூபாய் எடுக்க வேண்டிய நிலையில், வனக்குழு செயலர் கண்ணன், அந்த பணத்தை எடுக்க அதிகாரி பால்ராஜின் கையெழுத்து கேட்டார்.அதற்கு அவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கண்ணன் புகாரின் பேரில்லஞ்சஒழிப்பு போலீசார், அங்கு நேரில் சென்று கையும் களவுமாக வனத்துறை அதிகாரி பால்ராஜை கைது செய்தனர். 1998 அக்டோபரில் நடந்த சம்பவத்தின் வழக்கு 14 ஆண்டுகளாக நெல்லை சி.ஜே.எம்.,கோர்ட்டில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சாருகாசினி, வனஅதிகாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.