திருப்பூர்: மாநிலம் முழுவதும் பயன்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மழைநீர் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. அரசு கட்டடங்கள், பள்ளி கட்டடங்கள் மற்றும் மாணவர் விடுதிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமாக்கப்பட்டது.
கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்தன. கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் சரியாக கண்டுகொள்ளப்படவில்லை. மீண்டும் ஆட்சி அமைத்தபிறகு, மழைநீர் திட்டத்தை அ.தி.மு.க., தூசிதட்டி எடுத்தது. முதல்கட்டமாக, அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை முறைப்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில், மழை சரியாக பெய்யாமல் வறட்சி நிலவுவதால், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, மழைநீர் திட்டத்தை விரிவுபடுத்த <உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக, பயன்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை கண்டறிந்து, அதன் மூலமாக மழைநீர் சேகரிப்பை ஊக்கவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் செல்வகணபதி கூறியதாவது:
கிராம ஊராட்சி பகுதிகளில், பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், தண்ணீர் இல்லாமல் வற்றிப்போன ஆழ்குழாய் கிணறுகளை கண்டறியும் கணக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி, பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீர் சேகரிக்கப்படும்.
இதன் மூலமாக, மழைநீர், நேரடியாக நிலத்துக்குள் சென்று, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். வரும் 1ம் தேதி முதல், பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெறும். அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்பித்து, மாவட்ட நிர்வாக ஆலோசனையை பெற்று பணிகள் துவக்கப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.