horse meat sold distributed to the Burger company banned | குதிரை கறி பர்கர் விற்ற விவகாரம் வினியோகித்த நிறுவனத்துக்கு தடை| Dinamalar

குதிரை கறி பர்கர் விற்ற விவகாரம் வினியோகித்த நிறுவனத்துக்கு தடை

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குதிரை கறி பர்கர் விற்ற விவகாரம் வினியோகித்த நிறுவனத்துக்கு தடை

லண்டன்: அயர்லாந்தில், பர்கர் உணவில் குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, குதிரை கறி வினியோகஸ்தருக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தில், மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில், பர்கரில், குதிரைக் கறி வைத்து விற்கப்படுவதாக, புகார் எழுந்தது. இதுகுறித்து, வாடிக்கையாளர்கள், அரசிடம் புகார் தெரிவித்தனர்.அயர்லாந்து, விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அங்குள்ள, பர்கர் தயாரிப்பு மையங்களில், கால்நடை மருத்துவர்கள், சோதனை நடத்தினர்.பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், "டெஸ்கோ' நிறுவனம் தான், குதிரை கறி அடங்கிய, பர்கர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தது. குதிரை கறி அடங்கிய பர்கரை, வினியோகம் செய்ததால், டெஸ்கோ நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை இழந்து விட்டது. இதை அடுத்து, குதிரை கறி பர்கர்களை வினியோகித்த, "சில்வர் கிரஸ்ட்' என்ற நிறுவனத்திற்கும், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, "டெஸ்கோ' நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் டிம் ஸ்மித் குறிப்பிடுகையில், ""வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு என்பது மிக முக்கியம். இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்க, கறி உணவுகளில், டி.என்.ஏ. பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு குதிரை கறியை வினியோகித்த, சில்வர் கிரஸ்ட் நிறுவன சேவையை ரத்து செய்து விட்டோம்'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை