district news | 14கி.மீ., மிச்சமாகும் திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலை மேம்படுத்தப்படுமா?| Dinamalar

தமிழ்நாடு

14கி.மீ., மிச்சமாகும் திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலை மேம்படுத்தப்படுமா?

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மாமல்லபுரம் : கடலோர பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை இணைப்புக்கு அவசியமான திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலை, நீண்டகாலமாக பராமரிப்பின்றியும், மேம்படுத்தப்படாமலும் சீரழிந்து வருகிறது. கடலோர பகுதியில், சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் உட்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள், திருப்போரூர், திருவிடந்தை, கோவளம் ஆகிய புனித தலங்கள் உள்ளது. இப்பகுதிக்கு, பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இங்கு சுற்றுலா வருபவர்கள் வேடந்தாங்கல், மேல்மருவத்தூர் போன்ற இடங்களுக்கும் செல்கின்றனர். இதேபோன்று அப்பகுதியினரும், கடலோர பகுதிக்கு வருகின்றனர். இணைப்பு சாலை தேவை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்ட நிலையில், மாமல்லபுர கடலோர பகுதியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க, மேம்படுத்தப்பட்ட ஒரு சாலை அவசியமாகிறது. தற்போது, அத்தகைய இணைப்புசாலை இல்லை.
தற்போது, கடலோர பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கும், அப்பகுதியிலிருந்து கடலோர பகுதிக்கும் வர, செங்கல்பட்டு வழியாக சுற்றி (56 கி.மீ., தொலைவு) செல்ல வேண்டி உள்ளது. திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலையை மேம்படுத்தினால், நேரடியாக
(42 கி.மீ., தொலைவு) செல்ல இயலும். இதன் மூலம், 14 கி.மீ., சுற்றுவது குறையும்.
மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வரை, 17 கி.மீ., தொலைவிற்கு தரமான சாலை உள்ளது. திருக்கழுக்குன்றம் - மேலவலம்பேட்டை (மதுராந்தகத்தில்இருந்து 4 கி.மீ., தொலைவு) தேசிய நெடுஞ்சாலை வரை (21 கி.மீ., தொலைவு) சாலை மிக மோசமாக சீரழிந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் - நெல்வாய் (உத்திரமேரூர் அருகாமை) சாலை என, நெடுஞ்சாலைத்துறை வரையறுத்துள்ள இச்சாலை, திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் வழித்தடத்திற்கு இன்றியமையாதது. இவ்வழித்தடம், நீண்டகாலமாக ஒருவழிப்பாதையாக இருந்தது. இங்கு தொடர் மணல் லாரி போக்குவரத்தால், சாலை மிக மோசமாக சீரழிந்தது.
கோரிக்கை இச்சாலையை முழுவதுமாக, இருவழிப்பாதையாக மாற்றி மேம்படுத்தினால், மாமல்லபுரத்திலிருந்து மதுராந்தகம், வேடந்தாங்கலுக்கு நேரடிப்பாதையாக அமைவதோடு,
இப்பகுதி கிராமங்களுக்கும், பயன் அளிக்கும். எனவே, நெடுஞ்சாலைத்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர்.

கிராமங்களுக்கு பாதிப்பு
இப்பகுதியில் உள்ள, நாவலூர், நரப்பாக்கம், அகத்தீஸ்வரமங்கலம், முடையூர், காட்டூர், வழுவதூர், வல்லிபுரம், பூதூர் பகுதி மக்கள் திருக்கழுக்குன்றத்திற்கும், மேலவலம், கீழவலம், அரையப்பாக்கம், ஈசூர் பகுதி மக்கள் கருங்குழி மற்றும் மதுராந்தகத்திற்கும் அத்தியாவசியத்தேவை, கல்வி, மருத்துவ தேவைகளுக்கு செல்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் நெடுஞ்சாலை சீர்கேடால், அரசு பேருந்து போக்குவரத்து மிக குறைவாக உள்ளது. வாகனங்கள் செல்ல இயலவில்லை. இதனால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை