Mapi, an increase in the number of female gangster even remember the countless criminal acts | ம.பி.,யில் பெண் தாதா எண்ணிக்கை அதிகரிப்பு எண்ண முடியாத குற்ற செயல்கள் கூட அத்துப்படி| Dinamalar

ம.பி.,யில் பெண் தாதா எண்ணிக்கை அதிகரிப்பு எண்ண முடியாத குற்ற செயல்கள் கூட அத்துப்படி

Added : ஜன 30, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

போபால்: மத்திய பிரதேசத்தில், பெண் தாதாக்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், பெண்களின் குற்ற செயல்களும் கூடியுள்ளன. ஆண்களை விட பெண் குற்றவாளிகள் அதிகரித்து விடுவர் என, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.பொதுவாகவே, பெண்கள் என்றால் மென்மையானவர்கள்; வன்முறை பாதையை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அது தான் உண்மை என்றாலும்,மத்திய பிரதேசத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.ஏராளமான பெண் தாதாக்கள் உருவாகியுள்ளனர். கொலை, கொள்ளை, போதை கடத்தல், வங்கி கொள்ளை என, அனைத்து குற்றங்களில், சில பெண்கள்ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், மூன்று பெண் தாதாக்களுக்கு, குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் நுழைய கூடாது என, கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, 20 முறை கள்ளச்சாராய வழக்கில்சிக்கிய அனுசுயா, 38, என்ற பெண் தாதா, ஜபல்பூர் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


அது போல், சந்தோசி பாய் என்ற மற்றொரு பெண் தாதா, பல ஆண்டுகளாக, பெண்கள், சிறுமியரை கடத்தி வந்ததால், அவளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சம்பூர்ண லட்சுமி, வட்டிக்கு பணம் கொடுக்கும் மற்றொரு பெண் தாதா. இவரிடம் பணம்வாங்கியவர்கள், பணத்தை முறையாக செலுத்தாவிட்டால், அவர்களை நடுரோட்டில் இழுத்து போட்டு, அடித்து துவம்சம் செய்து விடுவாள். ஏராளமானோரை இவள் துவைத்திருந்தாலும், போலீசில் யாரும் புகார் கொடுக்கவில்லை.இவர்களை போல, பல பெண் தாதாக்கள், மத்திய பிரதேசத்தை கலக்கி வருகின்றனர். போதை பொருள் கடத்தல், வெடிகுண்டு வீச்சு, வங்கி கொள்ளை என கலக்கி வருகின்றனர்.இது குறித்து, போலீஸ் ஐ.ஜி., ஸ்ரீவத்சவா கூறுகையில், ""எந்தகுற்றங்களை பெண்கள் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறோமோ, அந்த குற்றங்களை எல்லாம் செய்யும் பெண் தாதாக்கள், மத்திய பிரதேசத்தில் உள்ளனர். அவர்களின் ஒரே குறிக்கோள், பணம் மட்டும் தான். ஆண் கிரிமினல்களை விட, பெண் குற்றவாளிகள் அதிகரித்து விடுவரோ என அஞ்சுகிறோம்,'' என்றார்."சில நாட்களுக்கு முன், பன்னா என்ற இடத்தில், ஒரு பெண் தாதா, தன் கும்பலுடன், கடப்பாரை கம்பி, சுத்தியலுடன், வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொண்டு இருந்தார். தகவல் அறிந்து வந்தவர்களை, அந்த கொள்ளை கும்பல் ஓட ஓட விரட்டி அடித்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்' என, வியப்பு காட்டுகிறார் மற்றொரு போலீஸ் அதிகாரி.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
31-ஜன-201307:07:14 IST Report Abuse
Guru ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை