புதுடில்லி: இந்திய வீரர்கள், தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு, நேரடி தொடர்புள்ளதாக, தகவல்வெளியாகியுள்ளது.காஷ்மீரில், இந்தியா-பாக்., எல்லை பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இரண்டு இந்திய வீரர்களை, சுட்டுக் கொன்றதோடு, அவர்களின் தலைகளை துண்டித்து, அதில், ஹேம்ராஜ் என்ற வீரரின், தலையை, தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம், எல்லை பகுதியில், பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், பதற்றம் குறைந்தது. இந்த விவகாரம் குறித்து, இந்திய ராணுவத்தின் புலனாய்வு அமைப்பு, விசாரணைநடத்தியதாக கூறி, அது தொடர்பானதகவல்கள், தற்போது வெளியாகியுள்ளன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய வீரர்கள், தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு நேரடி தொடர்புள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்- இ-முகமது, போன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலரை தேர்வு செய்து, அவர்களை, இந்த தாக்குதல் நடவடிக்கையில், ஐ.எஸ்.ஐ., ஈடுபடுத்தியுள்ளது.லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தான், ஹேம்ராஜின் தலையை துண்டித்துள்ளான். இதற்காக, அவனுக்கு, 5 லட்சம் ரூபாய், வெகுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஆனாலும், இதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.இவ்வாறு, அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.