பா.ஜ.,வில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை: சொல்கிறார் மூத்த தலைவர் வெங்கையா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பனாஜி: ""பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை;பிரதமர் வேட்பாளர் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, மூத்த தலைவர், வெங்கையா நாயுடு கூறினார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும், என மூத்த தலைவர், யஷ்வந்தா சின்கா, "கொளுத்தி' போட்டார். இது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. பா.ஜ.,வில் தலைவர்களே இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது என,அரசியல் நோக்கர்கள்கருதுகின்றனர்.தேர்தல் சமயத்தில், பிரதமர் வேட்பாளர் குறித்து, உயர்மட்ட குழு கூடி, விவாதித்து முடிவு எடுப்பது வழக்கம். ஆனால், தேர்தலேஅறிவிக்கப்படாத நிலையில், மாநில அளவில் பிரபலமாக உள்ள தலைவரை, பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், பா.ஜ.,வில் மூத்ததலைவர்களாக உள்ளவர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

கோவா மாநிலம் பனாஜியில் நிருபர்களிடம் பேசிய,பா.ஜ., மூத்த தலைவர், வெங்கையா நாயுடு கூறியதாவது:பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை;அத்வானி, சுஷ்மா சுவராஜ்மற்றும் நானும் உள்ளேன்.மூவருமே பல சாதனைகளை படைத்து உள்ளோம். பிரதமர் வேட்பாளர் குறித்து, சரியான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுப்போம்.மோடியை, குஜராத்தின் முதல்வராக பணியாற்ற மக்கள் ஓட்டளித்துள்ளனர். அவரும் பணியாற்றி வருகிறார். அவர், தேசிய தலைவர். அதற்கான முழு தகுதியும் அவரிடம் உள்ளது.இருப்பினும், பிரதமர்வேட்பாளர் குறித்து இன்னும் ஆலோசனையை துவக்கவில்லை.வரவிருக்கும், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும். இதை யாரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது.இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
01-பிப்-201301:18:49 IST Report Abuse
Yoga Kannan ஆமாம் பொள்ளாச்சி மிஸ்டர் ஹரி தாஸ் .... காங்கிரஸில் கொத்தடிமைகள் அதிகம் தான்... தலைமை சரியாக இருந்தால் தான் நிலைமை சரியாக இருக்கும் .....இந்த தலைமையெய் இந்தியா விரும்புது.... இரண்டு முறை மரியாதை செய்தது.... மூன்றாவது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்போரத்தை பார்க்கத்தான் போறீங்க ...ராகுலை கட்சி துணை தலைவராக பொறுப்பு யெற்ற போது.... 2 இடத்தில் இருந்தார் ,,,,அதே இடத்தில் இருக்கிறார்....என்றது....அதன் இன்றைய நிலை தடி எடுத்தவன் எல்லாம் பிரதம வேட்ப்பாளர்... ஒரு கட்சிக்கு இரண்டு தலைமை இருந்தால் இப்படியாப்பட்ட நிலைமை தான் ஏற்ப்படும்...
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
31-ஜன-201312:15:05 IST Report Abuse
vidhuran இன்றைய நிலைமையில் பிஜேபி, 1977 ஜனதாக் கட்சி போன்று, எல்லாமே ஆளாளுக்கு பேசும் தலைகள் தான். Online தொண்டர்கள் மட்டுமே. தேர்தல் வரும் முன்பே, அத்வானி தான் சிறந்தவர், இல்லை சுஷ்மா தான், இல்லை அருண் ஜெட்லிதான், ஒரு சில தமாஷ் பேர்வழிகள், ஒரு படி மேலே போய் மோடியின் பெயரைக் கூட சொல்லி, அத்வானிக்கும், சுஷ்மாவிர்க்கும் கடுப்பேத்துகிறார்கள். போதாக்குறைக்கு, சரத் யாதவ், நிதீஷ், தாக்கரே போன்றவர்கள் இந்தக் குட்டையை ஜரூராக நல்லா குழப்புகிறார்கள். இப்பொழுது இந்த ராஜ்நாத் சிங்கும் நானும் PM வேட்ப்பாளருக்கு மிகச் சரியான ஆள் தான் என்று சொல்லிவிட்டார். துரத்ருஷ்டவசமாக இந்தக் கும்பல் ஜெயித்தால், ஒரு ஆறு மாதம் ஆட்சியை நடத்த முடியுமா என்பது மிகக் கடினமே.
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-ஜன-201318:11:56 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஜனதா தள்ளின் ஆதரவால் வளர்ந்த கட்சியல்லவா அதுதான் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் போல கட்சியின் உருப்பினறேல்லாம் தலைவர் ஆகிவிட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
sumugan - bangalore,இந்தியா
31-ஜன-201312:05:58 IST Report Abuse
sumugan "பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லைபிரதமர் வேட்பாளர் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்,'' - நரேந்திர மோடியை முன்னிறுத்தாமல் பி ஜே பி தேர்தலில் வெற்றி கொள்ள முடியாது ..... சென்ற முறை கூட பி ஜே பி தேர்தலில் தோல்வி அடைந்தது சரியான தலைவர் முன்னிருத்தாதுதான் ... உள்கட்சி குழப்பதிலையே பி ஜே பி தலைவர்கள் மற்றவர்களை வெற்றிபெற செய்துவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
31-ஜன-201311:30:19 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar திரு.வெங்கைய அவர்கள் கருத்துகள் சரியானவை. பாரதிய ஜனதா கட்சி தலைமை தலைவர்கள் சிறப்பானவர்கள் மட்டுமே பிரதமர் வேட்பாளராக வேண்டும். அவை பாரதிய கட்சிக்கு சிறப்பை வளர்க்கும். - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
31-ஜன-201311:06:32 IST Report Abuse
P. Kannan நானும் இருக்கிறேன் என்று சொன்ன பொழுதே அவர் மேல் உள்ள மரியாதை போயிற்று. பிரதம வேற்பாளர் மரியாதைக்கு உரியவராக இருக்கவேண்டும் முதலில்.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
31-ஜன-201311:01:43 IST Report Abuse
சகுனி தொண்டர்களுக்கு தான் பற்றாக்குறைன்னு சொல்ல வரியா சார் ?
Rate this:
Share this comment
Cancel
Indian Boys - chennai,இந்தியா
31-ஜன-201310:22:42 IST Report Abuse
Indian Boys சாதனை புரிந்ததை பற்றி ...மக்கள் சொல்ல வேண்டும்..வெங்காய நாயூடு தானாக சொல்லிகொள்கிறார் ...
Rate this:
Share this comment
Cancel
Poor Patriot - bangalore,இந்தியா
31-ஜன-201309:52:52 IST Report Abuse
Poor Patriot அட வெங்காய நாயுடு. நன்றாக தலைமை வகிப்பவர்களுக்கு பெயர்தான் தலைவர்கள். எல்லாரும் ஆகிட முடியாது. அப்படி பாத்தா ஒற்றே ஒரு ஆள்தான் இருக்கார்.. இந்த நாட்டின் தலைவிதி.. கலாம் போன்றவர்களை இந்த மாதிரி லிஸ்டுல யோசிக்க கூட முடியலே.. இல்லேன்னா சொர்க்கமாக இருந்திருக்கும் நம் நாடு.
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
31-ஜன-201307:10:31 IST Report Abuse
Hari Doss காங்கிரசில் கொத்தடிமைகள் அதிகம். ஆனால் பிஜேபியில் தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். இதெல்லாம் அடிமைகளுக்குப் புரியாது. அப்படியே ஒருவரை தேர்ந்தெடுத்தாலும் அவரும் சோனியாவின் வீட்டு வேலைக்காரனாகத் எடுபிடியாகத் தான் இருப்பார்களே ஒழிய தானே முடிவெடுக்கும் அதிகாரம் உடையவராக இருக்க மாட்டார்கள். மந்திரிகளை நியமிக்கவும் அவர்களுக்கு இலாக்காகளை ஒடுக்கவும் நீராராடிய போன்றவர்கள் கூறும் ஆளையே பரிசீலிப்பார்கள். ஆனால் பிஜேபியில் கண்டிப்பாக அப்படி இருக்காது. இதெல்லாம் அடிமைகளுக்கு எங்கே தெரியப் போகிறது. சோறு கிடைத்தால் போதும் என்று உள்ளவர்களே காங்கிரசில் அதிகம்.
Rate this:
Share this comment
Basheer Ali - பட்டுக்கோட்டை ,இந்தியா
31-ஜன-201311:03:10 IST Report Abuse
Basheer Aliநீங்கள் சொல்வது நியாயம் தான் தலைமைக்கு கொத்தடிமைகளாக(தலைமை எடுக்கும் முடிவை ஏற்று செயல்படும் தொண்டர்கள் ) இருந்தால் தான் தலைமை சரியாக செயல்பட முடியும் இல்லை என்றால் தலைமை எடுக்கும் எந்த முடிவிற்கும் கட்டுப்படாமல் ஆளுக்கு ஒரு தலைமையின் கீழ் அல்ல அனைவருமே தலை வர்களாக செயல் பட்டால் அக்கட்சி வெற்றி பெறவே முடியாது அதற்கு சிறந்த உதாரணம் பா ஜ க தான் ...
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
31-ஜன-201306:11:03 IST Report Abuse
JALRA JAYRAMAN பா.ஜ.,வில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை, அது தான் முதல் தடங்கலே.
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-ஜன-201309:33:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் தொண்டர்களுக்கும் தான் பஞ்சமோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்