ஜமுல்: பீகாரில், நக்சலைட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, கட்டுமான தொழிலாளர்கள், எட்டு பேர், மூன்று நாட்களுக்கு பின் நேற்று விடுவிக்கப்பட்டனர்.கடந்த, 26ம் தேதி இரவு, ஜமூய் மாவட்டத்தில், ஏராளமான தொழிலாளர்கள், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த நக்சலைட்டுகள், எட்டுப் பேரை, அடர்ந்த வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.அவர்களை மீட்க, பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பின், எவ்வித நிபந்தனையும் இன்றி, எட்டு தொழிலாளர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,"எங்களை, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டம் அருகே உள்ள டேரி காட்டில் வைத்திருந்தனர். எங்களை கொடுமை படுத்தவில்லை' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.