புதுடில்லி: ஊழல் முறைகேட்டில் சிக்கும் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, போதுமான அளவில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க, மத்திய அரசு தவறிவிட்டதாக, சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது. இரண்டு மாதத்திற்குள், 22 சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டுகளை அமைக்க உத்தரவிட்டது.இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.வி., சிங்வி, பாக்கீர் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: அரசியலில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகள் தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கும்படி, 2011ம் ஆண்டு முதல், உத்தரவு பிறப்பித்து வருகிறோம். ஒவ்வொரு முறையும், பல்வேறு காரணங்களையும், விளக்கங்களையும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மனசு வைத்தால், சில மணி நேரங்களில் செயல்படுத்த முடியும். கடந்த, 2011ம் ஆண்டு ஜனவரி, 27ம் தேதி, நாங்கள் வெளியிட்ட உத்தரவில், சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கும்படி குறிப்பிட்டு இருந்தோம்.கடந்த, 2009ம் ஆண்டு ஜூலை மாதம், மாநில முதல்வர்களுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில், கூடுதல் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கும்படி, கடிதம் எழுதியுள்ளார்; அதற்கு சரியான நடவடிக்கை இல்லாததையும், கவனத்தில் கொள்கிறோம்.இன்னும் இரண்டு மாத காலத்திற்குள், 22 சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டுகளை, போதுமான கட்டுமான வசதி மற்றும்தேவையான ஊழியர்களுடன் அமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். கடந்த மாதம், 13ம் தேதி, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், வாதாடிய அரசு வழக்கறிஞர், 22 சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான, அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.தற்போது, மத்திய அரசு இரண்டு மாத அவகாசம் வழங்கியிருந்தாலும், ஒரு மாதத்திற்கு அரசு, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கும் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.