Advertisement
'டவுட்' தனபாலு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,23:24 IST

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இந்தாண்டு, மார்ச் மாதம் நடக்கும், ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசை, மேலும் நிர்பந்தப்படுத்தும், புதிய தீர்மானம் ஒன்றை, அமெரிக்கா தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரித்து, நிறைவேற்ற வேண்டும் என்பதே நம் உறுதியான வேண்டுகோள்.

டவுட் தனபாலு:
ஏற்கனவே, இப்படி ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து, அதை இந்தியாவும், தயங்கி தயங்கி ஆதரிச்சுது... அதனால, இலங்கையில இருக்கிற தமிழர்கள் வாழ்வுல, என்ன மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குன்னு தான், எனக்கு, "டவுட்!'

கர்நாடகா சட்டசபை சபாநாயகர் போப்பையா: ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 13 பேர் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும். லோக்சபா சபாநாயகர் மீராகுமாரிடம் கருத்து கேட்டு, அதன்படி முடிவெடுக்கப்படும்.

டவுட் தனபாலு: உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா...? சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம் சம்பந்தமா, லோக்சபா சபாநாயகர்கிட்ட எதுக்கு ஆலோசனை கேட்கணும்... கொஞ்சம் விட்டா, ஐ.நா., செயலர்கிட்ட கேட்டு தான் முடிவெடுப்பேன்னு சொல்லிடுவீங்களோன்னு தான், எனக்கு, "டவுட்!'

பத்திரிகை செய்தி: சவுதி அரேபியாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருசேர பணி புரியும் கடைகளில், இரு பாலரையும் பிரிக்கும் வகையில் சுவர்கள் எழுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது.

டவுட் தனபாலு: அவங்க பாட்டுக்கு, அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க... இப்படி எல்லாம், சுவர் எழுப்புறேன், தடுப்பு போடுறேன்னு சொன்னா, சுவருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு எட்டி பார்க்குற எண்ணம் தான் வரும்கிறதுல, எனக்கு, "டவுட்'டே இல்லை...!


மேலும் டவுட் தனபாலு செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
31-ஜன-201319:46:19 IST Report Abuse
KaNaGaRaJ. S... தமிழக மக்கள் பிரச்சினையை தீர்க்க வலி சொல்லாமல் இலங்கை பிரச்சினை ஐநா பிரச்சினை என்று ஓவர் படம் காட்டி எதனை நாளை ஓட்ட போறிங்களோ தெரியல
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.