புழல் சிறை கழிவுநீர் ரெட்டை ஏரியில் பாய்வதால் அபாயம் : முதல்வர் அறிவித்த சுத்திகரிப்பு திட்டம் கிடப்பில்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புழல் : புழல் சிறை கழிவுநீர் தொடர்பான சென்னை ஐகோர்ட் வழக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாநகராட்சியும் பதில் அளித்திருந்த நிலையில், கழிவுநீர் ரெட்டை ஏரியில் விடப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ரெட்டை ஏரியின் நீரும், பகுதி நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.
முதல்வர் அறிவித்த சிறை கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும்
திட்டம், கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இந்த பிரச்னை நீடிப்பதாக கூறப்படுகிறது.சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை, தண்டனை மற்றும்
மகளிர் சிறை என, மூன்று சிறைகள் உள்ளன. இவற்றில் தற்போது மொத்தம் 2,800 கைதிகள் உள்ளனர். 6 லட்சம் லி., கழிவுநீர் இந்த சிறைகள் மற்றும் சிறைக்காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றிலிருந்து
தினமும், 5 முதல் 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
மொத்த கழிவுநீரும், 12 அங்குல
குழாய்கள் மூலம், சென்னை கொடுங்கையூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
புழல் கதிர்வேடு சுரங்கப்பாதை அருகே, மாதவரம் ரெட்டை ஏரிக்கு
செல்லும் பொதுப்பணி துறையின் மழை நீர் கால்வாய் உள்ளது.
அதன் மீது, நான்கு வழி சாலைக்கான தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 150 அடி நீளம் கொண்ட அந்த பாலத்தை ஒட்டி, சிறையின் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சிறை கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையத்திற்கு செல்கிறது.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், புழல் சிறை கழிவுநீர், சிறை சுற்றுச்சுவரில் இருந்து வெளியேற்றப்படுவதால் ஏற்படு பாதிப்பு குறித்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
"நடவடிக்கை எடுத்து விட்டோம்'
அது குறித்த விசாரணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில்,"கழிவுநீர், குழாய்கள் மூலம் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது' என, தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியின் பதில்
மனுவில்,"பிரச்னை குறித்து புகார்கள்
வந்ததும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன' என, கூறப்பட்டது. ஆனால், உண்மை நிலவரம் வேறு
விதமாக இருக்கிறது.
மொத்த கழிவுநீரும் பொதுப்பணி துறை கால்வாய் வழியாக ரெட்டை ஏரியில் பாயும் வகையில், கதிர்வேடு தரைப்பாலத்தின் தடுப்பு சுவர் முடிவில்,
குழாய்கள் உடைக்கப்பட்டு உள்ளன.
ஏரியில் விழும் கழிவுநீர்
இதன் மூலம் கடந்த சில வாரங்களாக மொத்த கழிவுநீரும் ஏரிக்குள் பாய்கிறது. இதனால், ரெட்டை ஏரி நீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்
ஆகியவை, மாசுபட்டு, நோய் தொற்று
ஏற்படும் அளவுக்கு சீர்கெட்டுள்ளது.
மேலும் தேங்கிய ஏரி நீரில், கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம், கொசு உற்பத்தி ஆகியவை அதிகரித்துள்ளன.
இந்த விபரீதம் புரியாமல், தினமும் அங்கு சிலர் தூண்டில் மூலம் மீன் பிடித்து சென்று சமைத்து சாப்பிடுகின்றனர்.
இது பற்றி புழல் லட்சுமிபுரம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில்,""இந்த பிரச்னை மெல்ல கொல்லும் விஷமாக புழல், மாதவரம் பகுதி மக்களை பாதித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, சிறை மற்றும் பொதுப்பணி துறையினர் காலதாமதமின்றி முன் வரவேண்டும்,' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன காரணம்?
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கடந்தாண்டு
பட்ஜெட் கூட்ட தொடரில், சிறை
வளாகத்திற்கான நவீன சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, சிறை வளாகம் மற்றும் காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் இருந்து, தினமும் வெளியேற்றப்படும், 6 லட்சம் லிட்டர் கழிவு நீரை மறு சுழற்சி மூலம், மீண்டும் உபயோகிக்கும்
வகையில் சுத்திகரிப்பு செய்ய, 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க
திட்டமிடப்பட்டது.
திட்டம் வருமா?
இதனால், எதிர்காலத்தில் சிறை வளாக கழிவு நீரால் புழல் மாதவரம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரி, ரெட்டை ஏரி ஆகியவற்றுக்கு எவ்வித சுகாதார பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டது.
ஆனால், மேற்கண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை என, சிறை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

ஏப்ரல் 30,2017