வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
TNPSC - ன் இந்த ஆண்டிற்கான அட்டவணை அறிவுப்பு பலருக்கும் மிகுந்த ஏமாற்றமே. குறிப்பாக (Public library ) நூலக துறையில் மட்டும் சுமார் 10000-ம் காலி பணியிடங்கள் உள்ளது அதற்காக ஒரு இடம் கூட அறிவிப்பில் இல்லை. கடந்த பதினைந்து வருடங்களாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நூலக துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது ஒரு பெரிய புறக்கணிப்புதான். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரில் உள்ள ஆசிரியர் (lecturar) பணி இடங்களுக்கான அறிவிப்பும் இல்லை. இந்த ஆண்டின் TNPSC தேர்வு அட்டவணையில் வெறும் 10000- ம் என்பது பலருக்கும் ஏமாற்றமே. போன வருடம் 2012-ல் நடத்தப்பட தேர்வின் முடிவுகள் நான்கு ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் பல தேர்வின் முடிவுகள் வெளியிடவில்லை. இதற்கான விளக்கம் எதுவும் இல்லை. நுலகத் துறையை மேம்படுத்தினால் சமுகம் மிகவும் மேம்படும் என்பது மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் அறிவுரை. எது எப்படியோ பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த இயக்குனர் அவர்களுக்கும் முன்னால் செயலர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
ஆண்டுக்கு 5,00,000 பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள் என்பதற்காக அத்தனை பேரையும் அரசுப் பணியில் அமர்த்தினால் அரசின் வருவாய் முழுவதும் அவர்களுக்கு மட்டுமே செலவிட வேண்டி வரும். மக்களுக்கு ஒரு பணியும் செய்ய முடியாது. அரசுப் பணிகளைவிட சிறந்த பணிகள் பல தனியார் கம்பனிகளிடம் உள்ளது அதை பெற முயற்ச்சிக்க வேண்டும். ஓ அங்கு நன்கு வேலை செய்ய வேண்டும் கூடுதலாக அதுவும் இல்லாமல் லஞ்சப் பணம் கிடைக்காது என்று ஆதங்கம் இருக்கிறதா குரு அவர்களே?...
பார்ப்போம் இன்னைக்கு எத்தனை கருத்துக்கள் இந்த செய்திக்கு வருகிறது என்று கேவலம் ஒரு சினிமா படத்துக்கு நேற்றைக்கு வந்த கருத்துக்கள் ஏராளம். உண்மையில் அறிவார்ந்த மக்களாக இருந்தால் இந்த செய்திக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கணும். இல்லை என்றால் மக்கள் சினிமாவுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். நான் நேரில் கண்ட அனுபவம். ஒரு தொழிலாளி மின்வெட்டு பிரச்சனையால் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே வேலை கிடைத்துள்ளது. அவரிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அதை பற்றி கவலை இல்லை ஆனால் மிச்சமிருக்கும் நான்கு நாளில் மின் வெட்டு பிரச்சனையால் சீரியலும், சினிமாவும் டிவியில் தொடர்ந்து பார்க்கமுடியவில்லை அதான் ஒரே கவலையாக உள்ளது என்றார். வேலைக்கு செல்லாததை பற்றி அவருக்கு துளியும் கவலை இல்லை. இதுதான் தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலை.
"TNPSC" தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை இந்தியாவிலே ஒரு சிறந்த முன் மாதிரியாக மாற்ற முயற்சி செய்யும் திரு.நடராஜ் I.P.S அவர்கள் பாராட்டுக்குரியவர். அவ்வாறே இந்த ஆணையத்தில் மிகுந்த சீர் திருத்தங்களை கொண்டு வந்த திரு.உதய சந்திரன் I.A.S. அவர்களும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவர். திறமையுடன் நேர்மையாக செயல் படும் இந்த அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
உங்க கிட்ட ஆரம்பம் நல்லா தான் இருக்கு , ஆனா பினிசிங் சரியில்லையே ... கடந்த ஆண்டில் எவ்வளவு சொதப்பல்கள் ?? அதை சரி செய்து மீண்டும் வராமல் பார்த்து கொண்டால் பாராட்ட தக்கது... படித்த , தகுதியான , திறமை கொண்ட இளைஞர்களை லஞ்சம் வாங்காமல் தேர்வு செய்தால் போதும்... உண்மையில் உண்மை தெரிய வேண்டும் என்றால் குருப் 1 தேர்ச்சி பெற்றவர்களை கேட்டால் தான் தெரியும்...
அனைத்து மட்டத்திலும் லஞ்சம் வாங்கி கொண்டு உண்மையை மூடி மறைத்த கடந்த ஐந்தாண்டு ஆட்சி மாறிய பின் அதை சரி செய்ய அதுவும் நேர்மையாக செய்ய சில சொதப்பல்கள் தவறில்லை. சறுக்கல்கள்தான் தவறு. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது விமானம் சிறியதாகத்தான் தெரியும் ஆனால் அது உண்மை இல்லை. சில சொதப்பல்கள் என்பதும் அது போலதான். ஆனால் பினிஷிங் என்பது விமானத்தை அருகில் இருந்து பார்ப்பது போல் ஆகும். கொஞ்சம் அருகில் சென்று பாருங்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.