சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
"விஸ்வரூபம்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெங்கட்ராமன், "விஸ்வரூபம் படத்திற்கு, தமிழக அரசு விதித்திருந்த, இரண்டு வார தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படத்தை திரையிட, எந்தத் தடையும் இல்லை' என, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை கேட்டு, நேற்று முன் தினம் நள்ளிரவு, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், வீட்டுக்கு சென்று வாதிட்டார். ஆனால், மறு நாள் (நேற்று) காலையில் மேல்முறையீடு தாக்க செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், நேற்று காலை, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் முறையிட்டார்.அப்போது, "இது அவசர வழக்கு அல்ல' என்று குறிப்பிட்ட தற்காலிக நீதிபதி, விசாரணையை, பிற்பகல், 2:15 மணிக்கு, தள்ளி வைத்தார். பிற்பகல், துவங்கிய விசாரணை, ஒரு மணி நேரம் விவாதம் நடந்தது.அரசு தரப்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன்,"ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதிட்டனர்.
அட்வகேட் - ஜெனரல் வாதிட்டதாவது:விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து, ஒவ்வொரு தியேட்டருக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தவறான உத்தரவு. தியேட்டர்களுக்கு தான், 144 தடை தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அல்ல. இந்த தடை உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில், தியேட்டர் உரிமையாளர்கள் தான், கோர்ட்டை அணுகியிருக்க வேண்டும்.ஆனால், அப்படி இல்லாமல், பாதிக்கப்படாத சினிமா தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதல்ல. தடை உத்தரவை எதிர்த்து, அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு கோர்ட்டை நாடியிருக்க கூடாது. தடை உத்தரவில் மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது உத்தரவை திரும்ப பெறுவது போன்ற கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அல்லது போலீஸ் கமிஷனரிடம் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு தரப்பின் விவாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அளித்த தீர்ப்பு:விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த வழக்கில், பிப்., 4ம் தேதி, தமிழக அரசின் அட்வகேட்-ஜெனரல், பதில் மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை, தனி நீதிபதி, பிப்., 6ம் தேதி முடித்து வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறினர்.இந்த தீர்ப்பை அடுத்து, விஸ்வரூபம் சினிமாவுக்கு அரசின் தடை தொடர்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு தமிழனின் படத்தை தமிழ்நாட்டில் முடக்குவதில் அரசுக்கு ஏன் இவ்வளவு பெரிய அக்கறை என்பது மில்லியன் டாலர் கேள்வி . ஒரு தமிழன் சொந்த மாநிலத்தில் வாழ அரசே தடையாக இருந்தால் அவன் வேறு மாநிலத்தில் வாழ்வது பற்றியோ அல்லது வேறு நாட்டிற்கு குடி பெயர்வது குறித்தோ சிந்திப்பதில் தவறேதும் இல்லை .தமிழ் ,தமிழன் என வீர முழக்கமிட்டவர்கள் எல்லாம் இந்த தமிழனுக்கு ஆதரவு அளிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டதுதான் வெட்கக்கேடு. இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழனை ஏமாற்றி, அவன் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி பிழைப்பு நடத்தும் கபட வேடதாரிகளும் ஆவர் ... ...
ஒரு காலத்தில் வில்லன்களுக்கு மைக் டைசன், டிசோசா, என்று பெயர் சூட்டி கொண்டு இருந்தார்கள்...அப்புறம் தீவிரவாதிகளுக்கு " கான் " என்று பெயர் முடியுமாறு பார்த்து கொண்டார்கள்.... அதே சமயம் காவி உடை அணிந்தவ்ர்களையும் பெண் பித்தர்களாக காட்டி கொண்டு தான் இருந்தார்கள்... இதையெல்லாம் தடுக்க இயலாது... இதனை தடுத்தால் படம் எடுக்க முடியாது... ஆக சினிமாவில் இருந்து எவனும் நல்லதை கத்துக்க முடியாது...ஆனால் கெட்டதை மட்டும் தாராளம் கத்துக்கலாம்...... ஆனால் தமிழ்நாட்டில் சினிமா வை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை பார்த்தால் அசிங்கமாக உள்ளது... கேரளாவிலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் ஆட்சி... சிறுபான்மையினரை செல்ல பிள்ளைகளாக கொண்டாடும் அரசுகள் என்று பலரால் வர்ணிக்க படும் அரசுகள்...ஆனால் அந்த அரசுகளே விஸ்வரூபத்தை தடை செய்யவில்லை...ஆனால் தமிகத்தில் தடை என்பது...கமலுக்கும் , TV சேனல்களுக்கும் இடையே நடந்த நிழல் யுத்தம் என்பதை தவிர வேறென்ன சொல்வது?
கமலின் மற்றுமொரு நல்ல படைப்பு. நடுநிலைமையா தத்ருபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வந்த எத்தனையோ படங்கள் போல ஜாதி, மத அதிரடி கருத்துக்களில் நல்லவர்கள் தீயவர்கள் சித்தரிக்கப்படுவது போல தான் இதையும் கருத தோன்றுகிறது. மனதை புண்படும்படியாகவோ, பிரிவினையையோ தூண்டுமாறு இதை கருதாது நல்லிணக்கத்துடன் பரந்த மனப்பான்மையுடன் சகிப்புத்தன்மையுடன் நல்ல படமாக எல்லா தரப்பினரும் கருதலாம் என்பது என் கருத்து. அமெரிக்காவிற்கான எதிர் வாசகங்கள் நிகழ்வுகள் கதையாக இடம் பெற்றிருந்தும் இங்கு தடையின்றி சுதந்திரமாக அனுமதித்திருபபதிலிருந்து குடியரசின் கருத்து சுதந்திரம் என்ன என்பது தமிழகமும் தெரிந்து பிரச்சினை இன்றி எல்லா தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அமைப்பே நன்றாக உள்ளதாக பாராட்டி கூறியதாக முன்பு இங்கு செய்தி வந்துள்ளது. அதனை உருவாக்கிய தாயகத்தில் இதற்கு எதிர்ப்பு என்பது முறையற்றதாக தொடருகிறது.நீதிபதியே படத்தை பார்த்து விட்டு அனுமதித்த பின்பும் தனிப்பட்ட துவேஷங்கள் வறட்டு பிடிவாதம் என்பதன் போர்வையில் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றம் சென்று ஜன நாயகம் துவளக்கூடாது. நீதிபதிகள் தாமதிக்காது இதனை இக்கணமே தீர்த்து வைக்க வேண்டும். தமிழகத்தை இருபது வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்று கொண்டிருக்கும் கடந்த ஆட்சிகளின் அவலங்களும் தற்போதய மந்த முன்னேற்றங்களும் சவாலாக உள்ள கடும் பிரச்சினைகளையும் தீர்க்க தான் அரசு முனைப்பட வேண்டும் அன்றி சிறு விஷயங்களில் கால விரயம் என்பது தமிழகத்தை மீண்டும் பின்னோக்கி தான் கொண்டு செல்லும்.
அமானுல்லா அவர்களே. உங்கள் கருத்து மிகவும் நியாயமாக இருந்தது. சினிமா என்பது நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒரு காலத்தில் பிராமணர்களை கிண்டல் செய்து படங்கள் வந்தது. தற்போது அவர்களை கிண்டல் செய்து வருவதில்லை. காரணம் அவர்கள் சகாப்தம் முடிந்து விட்டது. அதே போல் தற்போது போலீசையும் அரசியல்வாதிகளையும் சினிமாவில் கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் செய்யும் அட்டூழியம் அப்படி. இஸ்லாத்தின், இஸ்லாமியர்களின் பெயர் உலகளவில் கெட முக்கிய காரணம் உலகெங்கும் பரவிக்கிடக்கும் இவர்களின் பயங்கரவாதம் தான். இதனை மறுக்கவும் முடியாது. இஸ்லாமியர்கள் ஒரு இடத்தில், பிரதேசத்தில், நாட்டில் அதிகளவு இருந்தால் அவர்கள் மற்ற மதத்தினரை அமைதியாக வாழவிடமாட்டார்கள், மதம் மாறினால் தான் பிழைக்க முடியும் என்பது உண்மை. பாகிஸ்தான் கிரிகெட் வீரரும் கிருஸ்துவரான யூசுப் யோகனாவே இதற்கு சிறந்த மாதிரி. இஸ்லாம் அமைதி வழி மார்க்கம், அங்கு வன்முறைக்கு இடம் இல்லை, அன்பை போற்றுகிறது என்று கூறினால் மட்டும் போதாது, அதற்கு REAL LIFE EXAMPLE வேண்டும். பைபிள் பலமுறை திருத்தம் காலத்திற்கேற்ப செய்யப்பட்டுள்ளது. இதனால் பல தர நாடுகளிலும் அது வேரூன்றியுள்ளது. குரானிலும் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அதனை இந்துவாகிய நான் சொன்னால் சரிபடாது. அதனை முஸ்லிம் பெரியவர்கள் தான் முன் மொழிய வேண்டும்.
தமிழக அரசை பொத்தம் பொதுவாக குறை கூற முடியாது....24 இயக்கங்கள் தடை செய்ய கூறுகின்டன ...தியேட்டர் எரிப்பு .... குண்டு வீச்சு நடந்தால் பழி அரசு மீதுதான்.... திரு கமல் அவர்களே உங்களளது ரசிகன் நான்.. ஆனால் தசாவதாரம் படத்தில் நீங்கள் பெருமாளை கயிறு கட்டி அங்கும் இங்கும் தூக்கி வீசுவதை பார்த்தபோது மனது வலிக்கத்தான் செய்தது.... அன்று போராடவோ அல்லது எதிர்க்கவோ பெரும்பான்மை சமுதாயத்திற்கு திராணி ஏதும் இல்லை மேலும் ஆதரவு அளிக்க அரசும் இல்லை...ஆனால் இன்று ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டீரே....பிரச்சனைகள் தீர்ந்து படம் வெளிவர வாழ்த்துக்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.