Why no govt initiative to resolve crisis over Vishwaroopam? Karunanidhi | கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி | Dinamalar
Advertisement
கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், "வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்' என, குறிப்பிட்டது தான், முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஒரு காரணமா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:"விஸ்வரூபம்' படத்தை, அ.தி.மு.க.,விற்கு மிகவும் வேண்டிய ஒரு, "டிவி' நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றுள்ளது; அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். பின், அதிக விலைக்கு, வேறொரு, "டிவி' நிறுவனத்திற்கு, விற்று விட்டது தான் காரணம் என, ஒருசாரார் சொல்கின்றனர்.நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், "வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்' என, சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும், கோபத்திற்கு ஒரு காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆனால், இந்தக் கருத்துக்கள் எல்லாம், எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை. ஜெயலலிதாவிற்கு, கமல் மீதான பகை என்பது, இப்போது ஏற்பட்டதல்ல; எம்.ஜி.ஆர்., உயிரோடு இருந்த போது ஏற்பட்டது.கமல் நடித்த, "விக்ரம்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில், எம்.ஜி.ஆர்., கலந்து கொண்ட போது, ஜெயலலிதா, தன் கைப்பட, எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில், "கமலின், விக்ரம் படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில், நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில், விளம்பரமே செய்யவில்லை. கமல் படம் ரிலீஸ் ஆன நாளன்று, ஒவ்வொரு நாளிதழிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தனக்காக, முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலுக்குத் தெரிகிறது. ஆனால், மக்கள் செல்வாக்கு உடைய, முதல்வரை அழைத்து விட்டு, விளம்பரமே செய்யவில்லை என்றால், கமல் உங்களை கிள்ளுக்கீரை என்றா நினைத்தார்' என்றெல்லாம் எழுதியதை, நினைவு கூர்ந்தால், எதற்காக இந்தத் தடை என, புரிகிறதா இல்லையா!இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (182)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
31-ஜன-201319:39:02 IST Report Abuse
Prabhakaran Shenoy வேட்டி கட்டிய கருப்பையா மூப்பனார் பிரதமர் ஆக வாய்ப்பிருந்தும் அவரை வரவிடாமல் சூழ்ச்சி செய்த பெருமை யாரை சாரும் என்பது இந்த உலகத்திற்கு தெரியும்
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
31-ஜன-201319:21:02 IST Report Abuse
Sulo Sundar ஐயா, தமிழ் படங்களில் பாவமன்னிப்பு தொடங்கி எத்தனயோ படங்களில் முஸ்லிம் மக்களுடிய மென்மையான குணத்தை சித்தரித்து இருக்கிறார்கள்...உண்மையில் முஸ்லிம்களின் கடவுள் பக்தி மகத்தானது...அப்படி இருக்கும்போது கமல் போன்ற ஒரு உன்னதமான கலிகன் முஸ்லிம்களை அவமதிப்பதுபோல் படம் எடுப்பாரா? இஸ்லாமிய அன்பர்கள் சிந்திக்க வேண்டும். வீணாக மஞ்சத்துண்டு போன்ற ஆட்களின் கபட நாடகத்தை நம்பி மோசம் போகவேண்டாம்...இவன் மக்களின் பணத்தை லட்சம் கோடிகணக்கில் திருடிய மாபெரும் திருடன் உஷார் உஷார் அம்மா போட்ட தடை உத்தரவு நல்லதையே செய்யும்...கமல் படம் பல நூறு கொடிகளை வசூல் செய்யும்....பார்க்கத்தானே போகிறோம்
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
31-ஜன-201318:27:42 IST Report Abuse
Raja Singh அமைதிக்கு பங்கம் வைப்பதையை உங்கள் வேலை , தாத்தா உங்கள் திருவாயை மூடி இருந்தாலே தமிழகம் அமைதியாகும் ...
Rate this:
5 members
0 members
21 members
Share this comment
Cancel
31-ஜன-201318:22:22 IST Report Abuse
சிந்திக்கும் வடிவேலு மஞ்ச துண்டு எதோ பிளான் போட்டு இருக்கார். இதை பார்க்கும் போது இவர் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்னு மக்கள் எண்ணுவார்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
31-ஜன-201317:35:19 IST Report Abuse
Shaikh Miyakkhan அய்யா முதலில் உங்களுடைய நிலைமை முடிவு என்ன வென்று சொல்லுங்களே பார்க்கலாம் ? அதை விட்டு விட்டு முதல்வர் கமல் மீது உள்ள கோபம் என்று அரசியல் ஆதாயம் தேட குழம்பிய குட்டைல் மீன் பிடிக்க வேண்டாம் .தமிழ் நாட்டில் அந்நிய முதலிடுக்கு எதிர்ப்பு என்றும் அங்கே டெல்லி இல் ஆதரவு என்றும் உம்மை போல் இரட்டை (டபுள்)வேடம் போடும் வேடதாரி என்பதை மறுப்புதற்கும் இல்லை marappatharkkum இல்லை
Rate this:
6 members
0 members
31 members
Share this comment
Cancel
Ram Esh - coimbatore,இந்தியா
31-ஜன-201317:31:49 IST Report Abuse
Ram Esh தினமலரில் சின்னதா ஒரு நியூஸ் பக்கம் ஒன்னு இருக்கு. அது சின்ன நியூஸ் ன்னு நெனச்சு படிக்காம விட்டுட கூடாது.அது தா அடுத்த நாள் ஹாட் நியூஸ் ஆ இருக்கும்.இந்த நியூஸ் என்ன தெரியுமா.விஸ்வரூபம் பட விவகாரம் தமிழக அரசிடம் பரிந்துரைக்கு போகிறது என்று.அதுல் சின்ன கமாண்ட் கருணாநிதி இதுல தலையிடாம குட்டய கிளப்பாம இருந்த நல்லது என்று............இப்ப கிளம்பிடுச்ச .................
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
31-ஜன-201317:19:56 IST Report Abuse
lakshman திரு முக, எங்காவது படத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னாரா என்று பாருங்கள். படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா இல்லையா என்று ஒரு வரியில் சொல்லவேண்டியது தானே. அதை விடுத்து அடுத்தவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதை திரு முக அவர்கள் மீண்டும் நிருபித்து உள்ளார். T....C....உடன்பிறப்பே போன ஆட்சியிலே பல புது படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்தார்களே அதுக்கு நீ இன்னா சொல்லரே
Rate this:
4 members
0 members
25 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
31-ஜன-201319:43:21 IST Report Abuse
Hari Dossஅது தான் ஓட்டு ஓட்டு என்ற மகா அஸ்திரம் அங்கு உள்ளதால் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் அவர் பேச மாட்டார் ...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
31-ஜன-201317:18:55 IST Report Abuse
lakshman திரு கமல் அவர்கள் அரசு தடை விதித்ததும் உடனே கோர்ட் சென்று கேஸ் பைல் பண்ணி பிரச்சனை பூதாகரம் ஆக வழி செய்து விட்டார். 2 நாட்கள் பொறுத்து அரசு மற்றும் மத தலைவர்களுடன் பேசி ப்றேசினையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முதலில் கருணாநிதிக்கு அருகதை கிடையாது இதில் கருது சொல்ல ஏனெனில் அவருடைய குடும்ப சண்டைய தீர்க்க நேரமில்லை . ஜெயா அரசின் செயல் பாடுகள் சரியாகத்தான் போய்கிட்டு இருக்கு , இவர் தலை இடாமல் இருந்தல போதும், பின்னர் அந்த விஜயகாந்து சொல்லவே தேவை இல்லை அவரைப்பற்றி விடுங்க நேரத்தை வீணடிக வேண்டாம்.
Rate this:
66 members
0 members
25 members
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
31-ஜன-201317:12:55 IST Report Abuse
lakshman திரு கமல் அவர்கள் அரசு தடை விதித்ததும் உடனே கோர்ட் சென்று கேஸ் பைல் பண்ணி பிரச்சனை பூதாகரம் ஆக வழி செய்து விட்டார். 2 நாட்கள் பொறுத்து அரசு மற்றும் மத தலைவர்களுடன் பேசி ப்றேசினையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
Rate this:
7 members
0 members
11 members
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
31-ஜன-201317:10:38 IST Report Abuse
RAJA பத்த வெச்சுட்டியே பரட்ட,ஆனால் கெடுதலிலும் ஒரு நன்மை கலைஞர் அறிக்கை கொடுத்தால் வேறு வழி இல்லாமல் முதல்வர் அவர்கள் வந்து தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய இடத்தில உள்ளார்
Rate this:
5 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்