E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காந்தி பெயரை இழுக்காதீங்க: காந்தியவாதிகள் வருத்தம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜன
2013
00:11
பதிவு செய்த நாள்
ஜன 30,2013 23:54

ராய்ப்பூர்:"பூரண மது விலக்கு கோரி போராடிய காந்தியடிகளை, மதுவுக்கு எதிரான பிரசாரத்தில் பயன்படுத்தாதீர்கள்' என, சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதாஅரசுக்கு, அம்மாநில காந்தியவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசில், மது விலக்கு கொள்கைகளை பிரசாரம் செய்ய தனி துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா, சில நாட்களுக்கு முன் நடந்த போது, "மாநில மதுவிலக்கு பிரசார விளம்பர தூதராக, மகாத்மா காந்தியடிகள் விளங்குவார்' என, முதல்வர், ராமன் சிங் கூறினார்.

இதற்கு காந்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காந்தி நினைவு தினமான நேற்று, காந்தியவாதிகள் கூறியதாவது:பூரண மது விலக்கு கோரி, தன் வாழ் நாளை செலவிட்டவர், மகாத்மா காந்தி. அவர் பெயரை பயன்படுத்தி மது விலக்கு செய்யும் சத்தீஸ்கர் அரசு, இரட்டை வேடம் போடுகிறது.ஒரு புறம் மதுவை விற்பனைக்கு அனுப்பி, மறு புறம் மது விலக்கு கொள்கைக்கு ஆதரவாகபிரசாரம் செய்வதை ஏற்று கொள்ள முடியாது.எனவே, பூரண மது விலக்கு பிரசாரத்திற்குமட்டும், காந்தியடிகளின் பெயரை பயன்படுத்துங்கள். ஏனெனில், மது அருந்தும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுங்கள் என காந்தியடிகள் ஒருபோதும் கூறவில்லை. மதுவே அருந்த கூடாது என்று தான் அவர் பிரசாரம் செய்தார்.இனிமேலாவது காந்தியடிகள் பெயரை, அரைகுறை மது விலக்கு பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
31-ஜன-201310:31:16 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மாக உன்னதமன தலைவர். உலக உத்தமர் மகாத்மா..,அவர்களின் மீது பற்று கொண்ட காந்தியவாதிகள் கருத்துகள் நியாயமனதே.., எதை உணர்த்து மாநில அரசு செயல் படவேண்டும். மத்திய அரசு உரிய நடவடிக்கை அம் மாநில அரசு மீது எடுக்கவேண்டும். ஜெய் ஹிந்த் - பூபதியார்
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
31-ஜன-201301:52:20 IST Report Abuse
தமிழ் சிங்கம் மதுவினால் அரசிற்கு கிடைக்கும் வரியை, ஏழைகளுக்குத்தான் அரசு பயன்படுத்துகிறது என்று தெரிந்தால், காந்தி மதுவிலக்கு கோரமாட்டார். நல்லது செய்வதற்காக பொய் கூட சொல்லலாம் என்று சொன்னவர்தான் காந்தி.
Rate this:
4 members
0 members
1 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
31-ஜன-201300:51:52 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் மது குடிப்பது என்பது ஒருவகையான நோய் தான்... அதை கொஞ்சம் கொஞ்சம் தான் சரி செய்ய முடியும்... குடி நோயாளியை முதலில் மனதளவிலும் , பிறகு உடலளவிலும் தேற்ற வேண்டும்... இல்லை என்றால் மது மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தலாம்.. குடியை உடனே விடு என்றால் எப்படி விடுவார்கள் ?? கொஞ்சமாது யோசிக்க வேண்டாமா ?? காந்தியை காட்டினால் கொஞ்சம் காந்தி மீது பற்றுள்ளவர்கள் மாறுவார்கள் என்று நினைத்து காந்தியை பயன் படுத்தியிருக்கலாம்.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.. பாஜக செய்தது சரியே :)
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
31-ஜன-201306:10:57 IST Report Abuse
NavaMayamஅது எப்படி அவர் பெயரை பயன் படுத்தாமல் இருக்க முடியும் ... அவரும் உடந்தைதானே ...காந்தி படம் போட்ட நோட்டை கொடுத்தால் தான் டாஸ்மாக்கில் சரக்கை கொடுக்கிறான் ....டாஸ்மாக்கில் காந்தி படம் போட்ட நோட்டு செல்லாது என்று சொல்லுங்கள் , மது குடிப்பது குறைந்து விடும்.......
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Poor Patriot - bangalore,இந்தியா
31-ஜன-201309:55:03 IST Report Abuse
Poor Patriotசூப்பரப்பு. அரசாங்கம் உண்மையிலேயே இப்படி யோசிக்கலாம். இது ஜோக் மாதிரி தெரியலே.....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.