பர்பூர்: பீகாரில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண், அந்த தொழிலுக்கு, "குட்பை' கூறி விட்டு, தற்போது, அரசியலில் குதித்து, கவுன்சிலராக உருவெடுத்து, சாதித்து காட்டியுள்ளார்.
பீகார் மாநிலம், முஜாப்பர்பூரைச் சேர்ந்தவர், ராணி பேகம், 42. இவருக்கு, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எதிர்பாரதவிதமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நெருக்கடியான நிலை, இவருக்கு ஏற்பட்டது.இந்த தொழிலில், பல்வேறு அவலங்களை, இவர் சந்தித்தார். திடீரென, "இந்த தொழிலை கை கழுவி விட்டு, அரசியல்வாதியாக மாறினால் என்ன' என்ற எண்ணம், இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், முஜாப்பர்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது, இவர், அரசியல்வாதியாக உருவெடுத்து, மக்கள் பிரதிநிதியாகவும் மாறி விட்டதால், பழைய தொழிலை, அடியோடு விட்டு விட்டார். தன் வார்டில் உள்ள மக்களின், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில், கவனம் செலுத்தி வருகிறார்.பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு, மற்றவர்களை போல், சராசரியான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதிலும், மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.முஜாப்பூர் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டபோதும், ராணி பேகத்துக்கு, வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், இவரது வார்டில் உள்ள மக்களின் தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதன் மூலம், அவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.