Is food adultration in kovai? | கோவையில் கலப்பட உணவுப்பொருட்களா? உஷார்படுத்துகிறது உணவுப் பாதுகாப்பு துறை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை நகரில் நடைபாதை உணவு கடைகள், நொறுக்கி தீனி கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு உணவு பொருட்கள் வழங்குவதாகவும் தொழில் போட்டியில் பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை கூவி., கூவி., விற்பனை செய்யும் நிலையும் அதிகரித்து விட்டது.

இம்மாதிரியான உணவு பொருட்களில் தரம் உள்ளதா? இல்லையா ? என்பதில் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும்.. மீண்டும்.. பயன்படுத்துவதால், உடல் உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது, இதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் சுகாதாரமற்ற உணவு, சுகாதாரமற்ற சூழலில் உணவு விடுதிகள் நடத்துதல், மாசடைந்த குடிநீர், காலாவதியான சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் குறித்து எச்சரிக்கை செய்கிறார் தமிழ்நாடு உணவு பாதுகாப்புப் பிரிவின், கோவை அதிகாரி கதிரவன்.

இது குறித்து கதிரவன் நமது நிருபரிடம் கூறியதாவது: உணவுப் பாதுகாப்புச் சட்டம், அனைவரும் சுகாதாரமான உணவை உட்கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்பதற்காகவே செயல்படுத்தப்பட்டது. சுகாதாரமான உணவு, நோயற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும். உணவகங்கள் சுற்றுப்புறச் சூழலை, நன்கு பாதுகாக்க வேண்டும். மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அருகே அமைந்திருந்தால், உணவு தயாரிப்பின்போது, சுகாதாரத்திற்கு கேடு வராமல், முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் திறந்த வெளி கழிப்பிடங்கள் அருகிலோ, கழிவு நீர்க்

கால்வாய்கள் அல்லது துர்நாற்றம் மற்றும் கழிவுப் பொருட்கள் சேமிப்புக்கிடங்குகளின் அருகிலோ, உணவு தயாரிக்கவோ, சேமிக்கவோ கூடாது. துருப்பிடிக்காத, உணவை நஞ்சாக்காத எளிதல் சுத்தம் செய்யும் பாத்திரங்களை மட்டும்தான், உணவு தயாரிக்க உபயோகப்படுத்த வேண்டும். குடிநீர்த் தொட்டிகள் கால முறைகளில் சுத்தப்படுத்தப் பட வேண்டும். அதற்கான பதிவேடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். நீரை சுத்திகரிக்கும் சாதனங்களை, குறிப்பிட்ட காலங்களில் சுத்தப்படுத்த வேண்டும். அதில் உள்ள கேன்டில்களை உபயோகப்படுத்தும் காலத்திற்கேற்ப, மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத கேன்டில்களில் படிந்துள்ள அழுக்குகள், நீரை மாசுபடுத்துவதோடு, கெடுதலையும் உருவாக்கும்.

காய்கறிகள் உள்ளிட்ட மூலப் பொருட்களை குடிநீர்க் குழாய்களில் கழுவ வேண்டும்.பெரிய பாத்திரங்களில் அள்ளிப்போட்டு, முக்கி எடுக்கக்கூடாது. காய்கறிகளில் ரசாயனப் பொருள் படிந்திருக்கும். அது நன்றாக கழுவப்படாவிட்டால், நோயை உருவாக்கும். உணவுடன் நேரடித் தொடர்புடைய பனிக்கட்டி மற்றும் நீராவி, அருந்தக்கூடிய குடிநீரால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, இட்லி வேக வைக்க சப்பை தண்ணீரையோ, உப்புத் தண்ணீரையோ பயன்படுத்தக் கூடாது.மூலப் பொருட்கள் அனைத்தும், எங்கு தயாரிக்கப்பட்டது, எப்போது, தயாரித்த நிறுவனம், வாங்கப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்கள் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்பொருட்களின் தன்மைக்கேற்ப, முதலில் வரப்பெற்றதை முதலில் பயன்படுத்த வேண்டும். முதலில் காலாவதியாகக் கூடியதை, முதலில் பயன்படுத்த வேண்டும். சுழற்சி முறையில்

Advertisement

இருப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்.கோவை மாவட்டத்தில், கட்டடங்களில் 450 ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், 300க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, முறையாக அனுமதி பெற்றுள்ளன.பேல் பூரி, வடை போன்றவற்றை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்வோரும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றவர்கள் தங்களது லைசென்சுகளை அனைவருக்கும் தெரியும்படி, கடையில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.

உணவில் வேண்டாம் ஆடம்பரம்:
:* உணவு நிறுவனங்களில், எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை எழுதி, அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
*அஜினமோட்டோவை பயன்படுத்தவே கூடாது. அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
* பாக்கெட்டில் வரும் சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அவை திறந்த வெளியில் இருக்கக்கூடாது. நான்கு டிகிரி செல்சியஸ் குளிர்ச்சி உள்ள பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்து, விற்பனை செய்யப்பட வேண்டும்.
*சில்லி சிக்கன், மீன் ப்ரை போன்றவற்றில் கலர்ப்பொடி சேர்க்கக் கூடாது. ஐஸ்கிரீம், ஜெல்லி, கேக், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப்பொருட்களில், கெடுதல் ஏற்படுத்தாத வகையில், 100 பிபிஎம் (part per million) அளவு தான் கலர் இருக்கவேண்டும். உணவுப்பொருள்கள் அதன் இயற்கை கலரில் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதல் சுவைக்காகவோ, கவர்ந்திழுக்கவோ, கலர்ப்பொடிகள் சேர்ப்பதற்கு அனுமதி இல்லை.
-நமது நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharajan - Oslo,நார்வே
31-ஜன-201317:54:00 IST Report Abuse
Varatharajan பார்க்கும் பார்வைக்கு கலர், கலர் அழகையும், வைத்து இருக்கும் பாங்கையும் தான் சாப்பிட வருகிறவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு எங்கே விலை குறைவு ஆக உள்ளது இது தான் இன்றைய காலத்தின் கட்டாயமாக தோன்றுகிறது அவசர உலக மக்களுக்கு. யாரு கடைகளுக்குள்ளே நீர் தொட்டி, எண்ணெய் பயன் படுத்தும் விதம், சமைக்கும் இடம், சமையலுக்கு பயன் படுத்தும் துணிவகைகள், பொருட்களின் காலாவதி தேதிகள், சமையல் செய்பவர்களின் உடல் சுகாதாரம் இப்படி இந்த (மாசு) சுகாதாரத்தை, சுத்தத்தை யாரும் கேட்பது இல்லை அதிகாரிகளும் செக்கிங் வரும் போது அவர்களின் பசியை உபசரித்து, மறைமுக மாக கை நிறைய உபசரித்து, வாய்நிறைய புன்னைகை ஆக அய்யா நீங்க சொன்ன மாதரி கடை பிடித்து சுத்தமாக செய்கிறோங்க அய்யா. "அடுத்த முறை நீங்க வந்து பார்த்தால் எந்த குறையும் காணாத, சொல்லாத அளவிற்கு" நாங்க சுத்தம், சுகாதாரத்தை பேணுவோம் அய்யா அய்யா என்று வாய் நிறைய புன்னைகையுடன் வழி அனுப்பி வைக்கும் பாங்கு இவைகளில் அசந்து போன நம் சுகாதார அதிகாரிகள் அடுத்து ஒருவடத்திற்கு அந்த பக்கம் காலடி எடுத்து வைக்க மாட்டாங்கள் அந்த அளவு கையூட்டு கவனிக்க பட்டு இருக்கும். இந்த அதிகாரி சொல்லும் அறிவுரைகள் எல்லாம் உண்மையில் கடை பிடிக்கணும் கோவை மாநகரம் மட்டும் அல்ல தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல சிறந்த அதிகாரி, சிறந்த பதிப்பு.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
31-ஜன-201315:10:53 IST Report Abuse
Rajasekaran Palaniswamy கோவை நகரில் நடைபாதை உணவு கடைகள், நொறுக்கி தீனி கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையினரின் தொப்பைகளை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அவர்களின் ஆசி(சை) இல்லாமல் நடைபாதையில்(?) கடை வைக்கமுடியாது. ஆமாம்.... நடை பாதை மக்கள் நடப்பதற்க்காகத்தானே. பின் எப்படி அங்கு கடைகள் வந்தன? மாநகராட்சி அவர்களுக்கு இடம் ஒதுக்கி வரி வசூல் செய்கின்றதா?
Rate this:
Share this comment
Cancel
Bala - Coimbatore,இந்தியா
31-ஜன-201310:49:10 IST Report Abuse
Bala கோவையில் இருந்த health இன்ஸ்பெக்டர் எல்லாம் வேற ஏதும் country கு போயிட்டானுங்களா ???
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
31-ஜன-201308:16:56 IST Report Abuse
Hari Doss சமையலை எல்லாம் பெண்கள் மறந்து விட்ட நிலையில் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
31-ஜன-201307:39:30 IST Report Abuse
Sami இதையெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிட எங்கே நேரம் இருக்கு நம் மக்களுக்கு. ஒரு சினிமாக்காரன் படம் தடை செய்யப்பட்டதுக்கு கூடும் கூட்டம் கூடுவார்களே தவிர இதை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஏனென்றால் சினிமாவும் அதனை சார்ந்தவங்களும் தான் முக்கியம். அடிப்படை வாழ்வாதாரம் எப்படி போனால் என்ன. செய்தி படிக்க கூட ஆள் இல்லை என்பதே வெக்கக்கேடான விஷயம்.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
04-பிப்-201312:56:02 IST Report Abuse
LAXசாமி சொல்வது மிகவும் சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.