சென்னை : "டெங்கு' காய்ச்சலின் பாதிப்பு, மீண்டும் துவங்கியுள்ள நிலையில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளின் விழிப்புணர்வுக்காக, சுகாதார துறை மீண்டும் மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியை நாடிஉள்ளது. திரு.வி.க., நகர் மண்டலத்தில், 64 முதல் 78 வரை மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், 69, 72, 76, 77 உள்ளிட்ட வார்டுகள் தாழ்வான பகுதிகள். இதனால் அப்பகுதிகளில், கழிவுநீர், குடிநீர் பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில், "டெங்கு' தொடர்பான விழிப்புணர்வு பணிகளுக்காக, சுகாதார துறையினர், மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியை நாடிஉள்ளனர். சுற்றுப்புற தூய்மை, தன் சுத்தம் உள்ளிட்டவை குறித்து, வீடுதோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில், ஐந்து மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டன.சத்தியவாணி முத்து நகர், கஸ்தூரிபாய் காலனி உள்ளிட்ட ஏழு குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் இருந்து, 8 டன் டயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.