தமிழகத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட, 194 பேர், பணியிடத்தில் இறந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில், 109 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் பல்வேறு கட்டுமானப் பணிகளில், ஆந்திரா, ஒடிசா, உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 10 லட்சத்திற்கும் அதிகமான கட்டுமான தொழிலாளர்கள், ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமானப் பணிதளங்களில், தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, 194 வடமாநில தொழிலாளர்கள் இறந்துள்ளது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில், அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில், 109 பேரும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28; திருச்சி மாவட்டத்தில், ஒன்பது; சேலம் மாவட்டத்தில் எட்டு பேரும் இறந்தது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில், பீகார், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.
இது குறித்து, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அருள்தாஸ் கூறியதாவது: தமிழகத்தில், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் எவருக்கும், போதிய பாதுகாப்பில்லை. அவர்களின் உடமைக்கும், உரிமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை; அவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
சொந்த மாநிலத்தில் வாழ வழியின்றி தமிழகம் வரும் தொழிலாளர்கள், இங்கு மடிவது துயரமானது. இவர்கள்
நலனைக்காக்க வழி காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.