மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தாக்கலான மனுக்களை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதால், அதன் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த, தமிழக போக்குவரத்துத்துறை செயலாளர், மதுரை கலெக்டர், விமான நிலைய கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு வெளியிட்டனர். இதை எதிர்த்து தமிழ்நாடு தியாலஜிக்கல் செமினரி முதல்வர் ஞானவரம், கென்னட் நகர் சக்தி, நாகமலை புதுக்கோட்டை வெங்கடாசலம், ஏர்போர்ட் நகர் சரஸ்வதி உட்பட 7 மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வக்கீல்கள், "தொழில் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (1997) கீழ், தொழில் தேவைகளுக்காக மாநில அரசு, நிலம் கையகப்படுத்த முடியாது. விமான நிலையம், தொழிற்சாலை அல்ல,' என்றனர்.
நீதிபதி: "சட்டப்படி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தலாம்,' என ஏற்கனவே சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கி, நிலம் கையகப்படுத்தி உள்ளனர். ஒரு மனுதாரர்," சம்பந்தப்பட்ட இடத்தில் அதிக தொகை முதலீடு செய்து, கல்வி நிறுவனம் நடத்துகிறோம். நிலம் கையகப்படுத்துவதால், அடிப்படை கல்வி உரிமை பாதிக்கும்,' என்கிறார். இதை ஏற்க முடியாது. தவறான நோக்கத்தில், நிலத்தை அரசு கையகப்படுத்தவில்லை. மக்கள் பயன்பாட்டிற்காகத்தான் கையகப்படுத்தியுள்ளனர். மனுதாரர்கள் இழப்பீடு பெற உரிமை உண்டு. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.