Advertisement
சோனியா மீது போலீசில் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,01:46 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 31,2013,01:55 IST

கரீம்நகர்: ‌தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத காங்.தலைவர் சோனியா மீது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் ஒருவர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கூறினார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த சர்தார் ரவீந்தர் சிங், கரீம் நகர் ஒன்டவுண் ‌போலீஸ் ஸ்டேசனில், இன்ஸ்பெக்டர் சுரேந்தரிடம், அளித்துள்ள புகார் மனுவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா , கடந்த 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது காங். ஆட்சிக்கு வந்தால் , தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 800 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு காரணம் சோனியா தான், அவர் தேர்தல் வாக்குறுதியை மீறிவிட்டார். வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை ‌எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.இஸ்பெக்டர் சுரேந்திரன் கூறுகையில், புகார் குறித்து அரசு வழக்கறிஞரின் கருத்தினை கேட்க அனுப்பி வைக்கப்படும் என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Pakanati ramesh - chennai,இந்தியா
31-ஜன-201312:02:46 IST Report Abuse
Pakanati ramesh வெளிநாட்டுக்காரி இங்க வந்து நாடாளுமன்றத்திலே அங்கத்தினராகலாம், ஆனா போலீஸ் மட்டும் ஒன்னும் செய்யாதோ? அவளுங்கோ அட்டூழியம் செய்யலாம் ஆனா இந்தமாதிரி ஆளுங்களை அடக்க நம்ம நாட்லெ சட்ட திட்டங்கள் இல்லையோ? என்ன நாகரீகம் யா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
31-ஜன-201307:09:07 IST Report Abuse
கோமனத்தாண்டி தம்பி ,, வெளிநாட்டு காரங்களை நம்ம போலீஸ் ஒன்னும் செய்யா முடியாது, டீ சாப்பிடுங்க
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.