நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், நகரமன்ற தலைவரிடம் வழங்கியது. இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு நெல்லிக்குப்பம் நகராட்சி விதித்த வரி கூடுதலாக இருப்பதால் 18 ஆண்டுக்கு முன் ஆலை நிர்வாகம் பண்ருட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், தற்போதைய கமிஷனர் சுரேந்திரஷா, சேர்மன் சுதாகர் ஆகியோர் ஆலை அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யாமல் நிலுவைத் தொகை 87 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை சுமூகமானதைத் தெடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு 56 லட்சம் ரூபாயை ஆலை துணைத் தலைவர் ராஜசேகர் வழங்கினார். மீதமுள்ள 31 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென ஆலை துணைத் தலைவர் ராஜசேகரிடம் சேர்மன் சுதாகர், நகராட்சி மேலாளர் சவுந்தரராஜன், இன்ஜினியர் இளஞ்செழியன், கவுன்சிலர் மோகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று சேர்மன் சுதாகரிடம் ஆலை துணைத்தலைவர் ராஜசேகர், 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று வழங்கினார். இப்பிரச்னை முடிவுக்கு வந்ததால், ஆறு மாதத்திற்கு 14 லட்சம் ரூபாய் வரி செலுத்திய ஆலை நிர்வாகம் இனி 23 லட்சம் வரி செலுத்தும். இதன் மூலம் மக்களின் அடிப்படை வசதிகளை செய்ய முடியும் என சேர்மன் சுதாகர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.